2026 மே 02, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையம் அமைக்க 1.2 பில்லியன் ரூபா நிதியுதவி

A.P.Mathan   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் ரூபா செலவில் கலாசார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கையுடன் இந்தியா புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையில் இந்தியா உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா மற்றும் கலாநிதி நிஹால் ஜயதிலக ஆகியோர் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலையில் கைச்சாத்திட்டிருந்தனர்.

அடுத்த 36 மாத காலப்பகுதியினுள் இந்த கலாசார நிலைய நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பொது நூலக வளாகத்துக்கும் புல்லுகுளம் நீர்நிலைக்கும் அண்மித்த காணிப்பகுதியில் இந்த கலாசார நிலையம் அமையவுள்ளது.

ஒரே தடவையில் 600க்கும் மேற்பட்டவர்களை கொள்ளக்கூடிய வகையில் இந்த நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .