2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஏப்ரல் மாதத்தில் மொத்த ஏற்றுமதி 1.67 பில்லியன் டொலர்களாக பதிவு

A.P.Mathan   / 2014 மே 27 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதத்தில் மொத்த ஏற்றுமதி 1.67 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்ததுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.6 வீத அதிகரிப்பாகும். முதலாவது காலாண்டில் மொத்த ஏற்றுமதி பெறுமதி என்பது 19.1 வீதத்தால் அதிகரித்து 2.8 பில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.

இதேவேளை மார்ச் மாதத்தில் இறக்குமதி மீதான செலவீனம் 8.2 வீத அதிகரிப்பை பதிவு செய்து 1672 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

ஏற்றுமதி அதிகரிப்பில் அதிகளவு பங்களிப்பை தொழிற்றுறைசார் ஏற்றுமதிகளின் மூலம் வழங்கப்பட்டிருந்தன. ஆடைத் தயாரிப்புகள் மற்றும் துணி வகைகள் போன்றவற்றின் ஏற்றுமதி 32.6 வீதத்தால் அதிகரித்து 457 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இறப்பர் உற்பத்திகளான டயர்களின் ஏற்றுமதியிலும் இந்த காலப்பகுதியில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X