2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 வீதமாக பதிவு

A.P.Mathan   / 2014 ஜூன் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 வீதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மூலம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த பெறுமதி 6.1 வீதமாக பதிவாகியிருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சேவைகள் துறை என்பது அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது, கடந்த ஆண்டு இந்த பெறுமதி 4.3 வீத வளர்ச்சியை பதிவு செய்து 56.3 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 6.5 வீத வளர்ச்சியை பதிவு செய்து 55.8 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சேவைகள் துறை நடப்பு ஆண்டில் 12.6 வீத வளர்ச்சியை பதிவு செய்து, 32.7  வீத பங்களிப்பை வழங்கியிருந்தது. கடந்த ஆண்டில் 10.7 வீத வளர்ச்சியை பதிவு செய்து 31.3 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது.

விவசாயத் துறை என்பது 2013 இல் 3.4 வீத அதிகரிப்பை பதிவு செய்து 12.4 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது, நடப்பு ஆண்டில் இந்த துறை 0.2 வீத அதிகரிப்பை மட்டும் பதிவு செய்து 11.5 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .