2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 173 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

A.P.Mathan   / 2013 ஜூலை 12 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியிருந்த 173 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
 
இந்த நிதியின் மூலம் மொத்தமாக 120 கிலோமீற்றர் தூர பாதைகள் புனரமைக்கப்படவுள்ளன. வடக்கில் வவுனியா – ஹொரவபொத்தானை (10 கி.மீ), மதவாச்சி வீதி (12.6 கி.மீ) மற்றும் கெபதிகொல்லாவ - பதவியா வீதி (31கி.மீ) அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
எஞ்சியிருக்கும் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வீதிகளை புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது. 
 
மொறட்டுவை – பிலியந்தலை (2.5கி.மீ), இரத்மலானை – மீரிஹான (2.1கி.மீ), தெற்கு அதிவேக நெடுஞ்சாலை – மத்துகம (12.4கி.மீ), கிருலப்பன – ஹோமாகம (2.1கி.மீ) மற்றும் கெஸ்பாவ – பொகுனுவில (14.4 கி.மீ) ஆகியன புனருத்தாரணம் செய்யப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .