.jpg)
2020ஆம் ஆண்டு அளவில் பார்வை குறைப்பாடுகளை நீக்கும் வகையில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விஷன் 2020 திட்டத்துடன் இணைந்து ஒரெல் கோப்பரேஷன் நிறுவனம் தமது பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
ஒரெஞ்ச் இலெக்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்திற்கமைய 2007 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட ' லைட் போ மீ - சைட் போ யூ' என்னும் தலைப்பில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விஷன் 2020 திட்டத்துடன் இணைந்து விழிப்புலனற்றோரின் குறைபாடுகளை நீக்கி அவர்களுக்கான உதவிகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றது.
'ஒரெஞ்ச் நிறுவனம் தமது உற்பத்திகளான மின்குமிழ்களை தயாரித்து வெளிச்சம் கொடுப்பதைப்போன்று பார்வை குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக வெளிச்சத்தை கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டு 'லைட் போ மீ – சைட் போ யூ' என்ற இத்திட்டத்தை ஆரம்பித்தோம். இதன்மூலம் பார்வை குறைப்பாட்டை நீக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது' என ஒரெல் கோப்ரேஷன் கூட்டு மற்றும் சட்டத்திற்கான குழுமப் பணிப்பாளர் சன்ன ரணசிங்க தெரிவித்தார்.
பார்வை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் , கண் வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் ஒரெஞ்ச் நிறுவனம் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட திட்டத்திற்கமைய இதுவரை 7000 கண்படல சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உதவிகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கைகளுக்காக ஒரெஞ்ச் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் மின்குமிழ்களிலிருந்து ஐந்து ரூபா ஒதுக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் தேசிய திட்டத்துடன் இணைந்து செயற்படும் ஒரெஞ்ச் நிறுவனம் விழிப்புலனற்றோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கண் வைத்தியசாலைகளிலுள்ள வார்ட்களின் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும், சத்திரசிகிச்சை நிலையங்களுக்கும் உதவிகளை வழங்கியுள்ளது. இதுதவிர அடிப்படை கட்டமைப்புக்களை ஏற்படுத்தும் பொருட்டு நாட்டில் பல பாகங்களிலுள்ள 11 வைத்தியசாலைகளுக்கு உதவியுள்ளது. 6 நகரங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கண் வைத்திய சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளதன் மூலம் ஒரெஞ்ச் நிறுவனத்தின் சமூக கூட்டு பொறுப்பு செயற்றிட்டம் எத்தகையது என்பது புலனாகின்றது.
ஒரெஞ்ச் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தமது சம்மேளனத்துக்கு வழங்கும் ஒத்துழைப்பு நிஜமாகவே பாராட்டத்தக்கது என விழிப்பிழந்தோர் சம்மேளனத்தின் தலைவர் அலெக்ஸ் ஜெயவர்தன தெரிவித்தார்.
வெள்ளை பிரம்பு தினத்தன்று ஒரெஞ் நிறுவனம் ஆயிரத்துக்கும் அதிகமான வெள்ளை பிரம்புகளை அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன் 25 இற்கும் மேற்பட்டவர்களுக்கு சுயதொழில்களை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.