2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கைக்கான சீனாவின் கடனுதவி 3836 பில்லியன் அ.டொலர்களை கடந்தது

A.P.Mathan   / 2014 மே 05 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கைக்கு சீனாவின் மூலம் வழங்கப்பட்டிருந்த வெவ்வேறான கடனுதவிகளின் மொத்த தொகை 3836 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாகவும், இவை 14 – 20 ஆண்டு காலப்பகுதியில் மீள செலுத்தப்படும் வகையில் 1.53 – 6.5 வீதம் வரையிலான வட்டிக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வீதி நிர்மாணம், துறைமுக நிர்மாணம், வலு பிறப்பாக்கல், நீர் விநியோகம், விவசாயம், ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சாதனங்கள் விநியோகம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. ஆயினும் இந்த நிதியுதவிகளுக்கு மேலாக இலங்கை சீனாவைச் சேர்ந்த சுமார் 1700 பேருக்கு 42 வெவ்வேறு திட்டங்களில் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .