
இலங்கையில் முதல் தடவையாக ஹஷ்ரா பிரைவேற் லிமிடெட், பல்வேறு வகையான வலு மற்றும் பணம் சேமிக்கும் இலத்திரனியல் சாதனங்களை உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இதில் extension leads மற்றும் பிரித்தானியாவில் வடிவமைக்கப்பட்ட 'MASDA' எனும் வர்த்தக நாமத்தைக் கொண்ட வலு சேமிக்கும் வலு மானி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கம்பனி மூன்று வகையான extension lead களையும் வலு சேமிக்கும் வலு மானியையும் நவீன தொழில்நுட்பத்தில் வலுவையும் பணத்தையும் சேமிக்கும் வகையில் அறிமுகம் செய்திருந்தது. 175 ஜுல்ஸ் வரையிலான பாதுகாப்பு (surge protector) மற்றும் 3,000 வாற்ஸ் வரையிலான மேலதிக சுமை பாதுகாப்பு (overload protector) ஆகியவற்றுடன் மேலதிக அனுகூலங்களையும் கொண்டுள்ளன.
ஹஷ்ரா பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரான தமித் விக்ரமரட்ன கருத்து தெரிவிக்கையில், '10 – 14 அலகுகள் வரை மாதமொன்றில் 'MASDA' electric leads பயன்படுத்துவதன் மூலமாக சேமித்துக் கொள்ள முடியும். கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்காக விசேடமான முறையில் அமைந்த இரு extension அமைந்துள்ளன. இவை குறித்த இரு சாதனங்களும் இடைநிறுத்தப்படும் போது, அவை தற்காலிகமாக செயலில் (standby) இருக்கும் போது ஏற்படும் மின் விரயத்தை தவிர்க்கும் வகையில் சுயமாக மின் வழங்கலை தடை செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக வீணான மின் விரயம் தவிர்க்கப்படுகிறது' என்றார்.
மற்றைய extension lead என்பது தன்னியக்க கட்டுப்படுத்தியுடன் காணப்படுகிறது. இதன் மூலம் பிரதான மின்வழங்கல் சுற்றிலிருந்து மின்சாரத்தை வழங்குவதை கட்டுப்படுத்தாமல் இந்த கட்டுப்படுத்தியின் மூலம் செயற்படுத்த முடியும். சகல extension வகைகளும் நான்கு தற்காலிகமாக செயலில் (standby) இருக்கும் சொக்கட் மற்றும் எப்போதும் செயலில் இருக்கும் சொக்கட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு வாடிக்கையாளருக்கும் 24 மணி நேரமும் மின்சார வழங்கல் தேவைப்பட்டால், அவர் எப்போதும் செயலில் இருக்கும் சொக்கட் வகையை பயன்படுத்த முடியும்.
வலு சேமிக்கும் மின் மானியின் மூலம் பாவனையாளர்களுக்கு பயன்படுத்தப்படும் வலுவின் அளவை இலகுவாக கணக்கிட்டுக் கொள்ள முடிவதுடன், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவையும் சுயமாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.
'குறித்த வாசிப்புகளுக்கு அமைய, வாடிக்கையாளர்களுக்கு தமது மின்சார கட்டணப்பட்டியல்களின் செலவீனத்தை குறைத்துக் கொள்ள முடியும். அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களை இனங்கண்டு, இயலுமானவரை அவற்றின் அவற்றின் பாவனையை குறைத்துக் கொள்ளலாம். மின் மானியில் காணப்படும் மற்றுமொரு செயற்பாடாக ஒன்றிணைக்கப்பட்ட காபன் பதிவு காணப்படுகிறது' என்று தமித் விக்ரமரட்ன மேலும் குறிப்பிட்டார்.
MASDA extension leadகள் மற்றும் மின் மானிகளை ஆர்பிகோ சுப்பர் சென்ரர்கள், ஆர்பிகோ சுப்பர் ஸ்ரோர்ஸ் மற்றும் நாட்டின் முன்னணி இலத்திரனியல் விற்பனை நிலையங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
'இந்த சகல பொருட்களுக்கும் ஒரு வருட முழுமையான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. உத்தரவாத காலப்பகுதியின் பின்னர், இலகுவான சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அவசியமான உதிரிப்பாகங்களையும் நாம் போதியளவு கொண்டுள்ளோம்' என தமித் மேலும் தெரிவித்தார்.
விக்ரமரட்ன அவர்களின் கூற்றுப்பிரகாரம், இந்த power extensionகள் கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கும் பொருத்தமானவையாக அமைந்துள்ளன. பெருமளவில் கணினிகள் பயன்படுத்தல்கள் இங்கு இடம்பெறுகின்றன. புhவனையில் இல்லாத நிலையில் இந்த extension சுயமாக மின்வழங்கலை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளமையால் வலுவையும் பணத்தையும் சேமிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த தயாரிப்புகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை 94, ரொஸ்மீட் பிளேஸ், கொழும்பு 07 அல்லது 0772 697415, stanvo@sltnet.lk ஆகியவற்றில்pருந்து பெற்றுக் கொள்ளலாம்.
1991ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட ஹஷ்ரா பிரைவேற் லிமிடெட், ஸ்டென்வோ ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் அங்கத்துவ கம்பனியாகும். MASDA இலத்திரனியல் சாதனங்களை இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனமாக இது திகழ்கிறது. இந்த சாதனங்கள் பிரித்தானியாவில் வடிவமைக்கப்பட்டு, மலேசியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
