
தனது ஊழியர்களுக்கு பணியாற்றுவதற்கு சிறந்த தொழில்நிலையத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக 99X Technology இன் மூலம் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இலங்கையில் தொழில் புரிவதற்கு சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் இந்த பெருமைக்குரிய தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரே தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எனும் பெருமையையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
பிரதான விருதுக்கு மேலதிகமாக நிறுவனம் மேலும் இரு 'விசேட பிரிவு விருதுகளை' வென்றிருந்தது. இலங்கையிலுள்ள Great Place to Work Institute மூலம் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலிருந்து இந்த தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது. நிறுவனங்களில் பின்பற்றப்படும் சிறந்த கொள்கைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. முதலாவது விருது, ஊழியர்களுக்கு தம்மை விருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் திறமை விருத்திக்கான கௌரவிப்பு விருது மற்றும் சிறிய நிறுவன பிரிவில் சிறந்த நிறுவனம் (50 – 200 ஊழியர்கள்) எனும் விருதும் வழங்கப்பட்டிருந்தது.
99X Technologyஇன் இணை தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கருத்து தெரிவிக்கையில், 'தொழில் புரிவதற்கு சிறந்த இடமாக நாம் தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக தெரிவு செய்யப்பட்டமையையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். எமது ஊழியர்களின் பங்களிப்பில்லாமல் இந்த உயர்ந்த நிலையை எம்மால் எய்தியிருக்க முடியாது' என்றார்.
13 துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 53 நிறுவனங்கள் இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பில் உள்வாங்கப்பட்டிருந்தன. இதில் 10000க்கும் அதிகமான ஊழியர்கள் தமது கருத்துக்களை வழங்கியிருந்தனர். இந்த கருத்துக்கணிப்பு இரு பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நம்பிக்கை சுட்டெண் கருத்துக்கணிப்பு மற்றும் கலாசார கருத்துக்கணிப்பு என்பன அவையாக அமைந்திருந்தன.
2013 இல், 99X Technology, 2013 இல் இரு பிரிவுகளிலும் உயர் மதிப்பெண்களை பதிவு செய்திருந்தது. அத்துடன் ஊழியர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களும் பெறப்பட்டிருந்தன. சிறந்த மனிதவள செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்பவற்றை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. 99X Technology ஊக்கமளிக்கும் புத்தாக்கம், சிந்தனைத்திறன் மற்றும் ஊழியர்கள் ஈடுபாடு போன்ற செயற்பாடுகளுக்காக 'millennial-friendly' தொழில் சூழலுக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டிருந்தது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஆகியன 99X Technologyஇன் திறந்த கலாசாரத்தில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு தமது நிபுணத்துவமான வாழ்வில் சிறந்த உள்ளம்சத்தை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவற்றின் மூலம் தமது சொந்த இலக்குகளை நம்பிக்கையுடன் எய்துவதற்கு வழிகாட்டுவதுடன், தமது பிரத்தியேக இலக்குகளை நிறுவனத்தின் வளர்ச்சியுடன் இணைத்து அதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியிலும் பங்களிப்பு செய்ய உதவியாக அமைந்திருக்கும்.