2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மிஹின் லங்காவின் 3ஆம் தொகுதி பயிற்சி First Officers பறக்க ஆயத்தம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான மிஹின் லங்கா, 2013ஆம் ஆண்டு இணைந்து கொண்ட மூன்றாவது தொகுதி கேடட் (cadets) பயிலுனர்களே பறக்க ஆயத்தமாகியுள்ளனர்.

இவர்களின் மிகச்சிறந்த முன்னேற்றத்தை காண்பிப்பது குறித்து மிகுந்த பெருமை கொண்டுள்ளது. அனைத்து 11 பயிற்சி முதல் அலுவலர்களையும் (Trainee First Officers - FOs)  முழுமைப்படுத்தப்பட்ட விமானிகளாக பறத்தலுக்கு தயார்படுத்த முன்மதிப்பிடப்பட்ட வகையில் வெறுமனே 12 மாதங்களுக்குள் அவர்களுக்கான பயிற்சியை அளித்ததன் ஊடாக மிஹின் விமான சேவையானது தனது கட்டுப்பாட்டை நிறைவேற்றியுள்ளது.
 
மிஹின் லங்கா விமானப்பயணச் செயற்பாடுகள் பணிப்பாளர் கேப்டன். பூஜித ஜயக்கொடி இதுகுறித்து தெரிவிக்கையில்


'இந்த சாதனையானது, திறமை மற்றும் அர்ப்பணிப்புணர்வு கொண்ட இளம் பயிற்சி விமானிகளின் விடாமுயற்சியினாலும், பயிலுனர் விமானிகளுக்கு simulator பயிற்சியளித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வதிவிட simulator பயிற்றுவிப்பாளர்களின் அர்ப்பணிப்புணர்வினாலுமே சாத்தியமானது.

மிஹின் லங்காவின் மூத்த பயிற்றுவிப்பாளர் கப்டன்கள் தமது அனுபவம் குறித்து பேரார்வத்துடன் இந்த புதிய தொகுதி விமானி பயிலுனர்களுக்கு பகிர்ந்துகொண்டமையும் இந்த பயிற்சியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

குழுநிலைப்பணியாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன இந்த மைல் கல்லை எட்டுவதற்கு முக்கிய காரணியாக விளங்கியதுடன், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டமும் இதற்கு முக்கிய காரணிகளாக விளங்கியதென்றால் அது மிகையில்லை.

ஐக்கிய இராச்சியத்தின்  Alpha Aviation மற்றும் Sim bio tics  ஆகியவற்றினால் உபயோகிக்கப்படும் ADAPT  நேர்முக முனைப்பினை கைக்கொண்ட முதன்மையாளர்கள் நாமாவோம். இதன் ஊடாக, எம்மால் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் நாம் எதிர்பார்க்கும் பண்புகள் உள்ளனவா என்று கண்டறிவதற்கு குறித்த இந்த பிரத்தியேக நேர்முக செயன்முறை மிக உதவியது.

உலகத்தரமிக்க விமானிகளை உருவாக்கி அவர்கள் எதிர்காலத்தில் விமானங்களின் கொமாண்டர்களாக்கி மக்களுக்கும் சமூகத்தினருக்கும் அளிக்கும் பொறுப்புடமை எமக்கு உள்ளமையால் எமது தெரிவு செயற்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என நாம் கருதுகிறோம்' என்றார்.
 
மிஹின் லங்கா பயிற்சி மற்றும் தராதரங்களுக்கான தலைமை விமானி கேப்டன். தேமிய அபேவிக்ரம அவர்கள் கருத்துரைக்கையில்

'தெரிவுசெய்யப்பட்ட பயிலுனர்கள் இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபையிடமிருந்து வர்த்தக விமானிகளுக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

பொருத்தமான விண்ணப்பதாரிகள் ADAPT திறனாய்வு செயன்முறை ஊடாக தேர்வுசெய்யப்பட்டதும் அவர்கள் மிஹின் லங்காவினால் நடாத்தப்படும் தரைப்பயிற்சி சாலையில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ், LTU மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றினைச் சேர்ந்தBoing 747 and Lock Head Tri Star  விமானங்கள் குறித்த நிபுணத்துவம் பெற்ற  மிகுந்த அனுபவம் வாய்ந்த விமான பொறியியலாளர்களாகிய தரைப் பயிற்சியாளர்களின் (ground instructors  இன்) பங்களிப்புடன் கூடிய பயிற்சி வகுப்பில் கற்றல் செயற்பாடுகளை ஆறு வாரங்களுக்கு மேற்கொள்கின்றனர்.

இவர்களின் பயிற்சிக்காலத்தில், குறித்த தரைப்பயிற்சியாளர்கள், பயிலுனர்களுக்கு பெரிய மற்றும் நவீன விமானங்களில் உள்ள சிக்கலான பணிக் கட்டமைப்புகள் குறித்து அறிமுகப்படுத்துவர். அதன்பின்னர், அவர்கள் Aircraft Type Specific ground school    மற்றும் எயார் பஸ் யு320 இல் simulated விமானப்பயிற்சி ஆகியவை உள்ளடங்கிய Type Rating Course இனை பூர்த்தி செய்கின்றனர்.

இந்தக் கூறுபாட்டை உள்ளடக்கிய பயிலுனரின் பயிற்சிகள் அண்ணளவாக ஒவ்வொரு நபருக்கும் ஆறு முதல் 8 வாரங்களை உள்ளடக்கியுள்ளது.

இது பூர்த்தி செய்யப்பட்டதும், அவர்கள் பயிற்சி கேப்டன் ஒருவரின் துணையுடன் உண்மையான விமானம் ஒன்றில் விமானமோட்டும் பயிற்சி பெற ஆரம்பிக்கின்றனர்.
line orientation என அழைக்கப்படும் பயிற்சியின் இந்த கூறுநிலையானது பயிலுனர்களுக்கு ஆகக்குறைந்தது 40 sectors (take offs and landings) முதல் ஆகக்கூடியது 60 sectors வரையான பறத்தல் காலத்தை அவர்கள் முழுமையான அனுமதி பெற்ற first officers  ஆக பறப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு முன்னர் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

Line பயிற்சியானது விமானப் பயணத் தொழிற்துறையில் ஆகக்குறைந்தது 20 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட மிஹின் லங்காவின் வதிவிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிலுனர்களால் மேற்கொள்ளப்படுகின்றது'
 
 மிஹின் லங்கா தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று  அதிகாரியான நிஷாந்த ரணதுங்க  குறிப்பிடுகையில்

'மிஹின் லங்கா எப்போதும் புதிய சவால்களை எதிர்நோக்க தயாராக உள்ளதுடன், தற்போதைய தொழிற்துறை கேள்விகள் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றினை சந்திப்பதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் நாம் எதிர்கொள்ள தக்க நிலையில் உள்ளோம்.

எமது பயிற்சி முகாமைத்துவம் ஏற்கனவே 4ஆவது தொகுதி பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது விமானத் தொழிற்துறையில் எழுந்துள்ள தற்போதைய கேள்விகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் மிஹின் லங்காவினால் உருவாக்கப்பட்ட அண்ணளவாக 20 first officer  கள் எதிஹாட், டைகர் எயார்வேய்ஸ், வியட்னாம் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகிய பல பெரும் விமான சேவைகளில் பணியாற்றும் வகையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மிஹின் லங்காவில் உள்ள நாம் தொடர்ச்சியாக எமது தராதரங்களை மேம்படுத்தலில் நம்புகின்றோம். கண்டிப்பான காலக்கெடுவை பின்பற்றி உலகத்தரம் வாய்ந்த இளம் விமானிகளை உருவாக்க துணை புரிந்த எமது பயிற்சியாளர் குழாம் மற்றும் தொழிற்துறை நிபுணர்களுக்கு எனது நன்றிகளை இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
சர்வதேசத்தில் சிறந்த தொழிநுட்ப குழு அங்கத்தவர்களுக்கான அதிகரித்த கேள்வி உள்ளது. மிஹின் லங்கா ஆனது, இலங்கையின் விமான சேவை என்ற வகையில், இலங்கையின் அனைத்துப் பாகத்திலுமுள்ள இளையவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அளிக்க வேண்டியது எமது கடமை என்பதனை நம்புகின்றது' என்றார்.
 
மிஹின் லங்காவுடனான பயிற்சி அனுபவங்கள் குறித்து கருத்துரைத்த மிஹின் லங்கா பயிற்சி First Officer  ருச்சாக்க ததுகமுவ,

'மிஹின் லங்கா, விமானியாக வேண்டும் என்ற வாழ்நாள் கனவினை நனவாக்குவதற்கான வாய்ப்பினை அளித்துள்ளது. ஆறு மாதங்களில் எனது பயிற்சி நடவடிக்கைகளை நான் பூர்த்தி செய்துள்ளேன்.

எனது பயிற்சியாளர்கள் மூலமாக கிட்டிய மிகச்சிறந்த பயிற்சிகளுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான மிஹின் லங்கா குழுவுக்கும் அவர்கள் எமக்களித்த ஆதரவு மற்றும் துணைக்காக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
 
பயிற்சி அனுபவம் குறித்து தெரிவித்த மிஹின் லங்கா பயிற்சி First Officer  ஆதில் அனீஸ் அவர்கள் 'மிஹின் லங்காவிடமிருந்து கிடைத்த மிக விசாலமான பயிற்சிகள் எமது அறிவாற்றல் மற்றும் திறனை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளது.

மிஹின் லங்காவின் அனுபவம் மிக்க பயிற்சியாளர் குழுவினால் அளிக்கப்பட்ட சவால்கள் நிறைந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது, எமது அறிவாற்றல் மற்றும் திறன்களை குறிப்பிடத்தக்களவு விருத்தி செய்துள்ளது. மிஹின் லங்காவினால் அளிக்கப்படும் இந்த சவால்மிக்க பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது எமக்கு திடநம்பிக்கையை அளித்ததுடன் விமானம் ஒன்றைக் கையாளும் எமது திறன்களையும் மெருகேற்றியது' என கூறினார்
 
இது குறித்து மேலும் தெரிவித்த மிஹின் லங்கா பயிற்சி First Officer திலக்ஷன் அங்குனுவல,

'மிஹின் லங்கா உடனான எனது பயிற்சி அனுபவம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. மிஹின் லங்கா தீவிரமான பாடநெறி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை பயிலுனர் விமானிகளுக்கு அளிப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச தராதரங்களை கைக்கொள்கின்றமை குறித்து மிகுந்த பெருமையடைகின்றேன். எமது அடிப்படை தரைப்பயிற்சிகள் 15 வருட கால அனுபவத்தைக் கொண்ட நிபுணத்துவ பயிற்சியாளர்களால் அளிக்கப்பட்டது.

தசாப்தங்களுக்கு மேலான பறத்தல் அனுபவத்தைக் கொண்ட மிஹின் லங்காவின் சிரேஷ்ட கேப்டன்களால் அளிக்கப்பட்ட Line பயிற்சிகளும்  மிகச்சிறந்த வாய்ப்பினை எமக்களித்தது. மிஹின் லங்காவுடன் மேற்கொண்ட இந்த பயிற்சிநெறியை பூர்த்தி செய்யக்கிடைத்தமை மிகுந்த வரப்பிரசாதமாகும். தொடர்ந்து மிஹின் லங்காவில் பணியாற்ற ஆவலாய் உள்ளேன்' என்று குறிப்பிட்டார்
 
Photo Caption  (இடமிருந்து வலமாக)- சுராஜ் பெரேரா, ஆதில் அனீஸ, ஜெஹான் பெர்ணாண்டோ, ஈஸ்வரன் ராமநாதன், பயிற்சி மற்றும் தராதரங்களுக்கான தலைமை விமானி கேப்டன். தேமிய அபேவிக்ரம, மிஹின் லங்கா விமானப்பயணச் செயற்பாடுகள் பணிப்பாளர் கேப்டன். பூஜித ஜயக்கொடி, ஹரித் பெரேரா, ஹரித் ஜயசிங்க, இந்துல அபேநாயக்க, திலக்ஷன் அங்குனுவல ஆகியோர்.
படத்தில் இல்லாதவர்கள்: ருச்சாக்க ததுகமுவ மற்றும் எரங்க கருணாரட்ண ஆகியோர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .