
Cathay Pacific விமானசேவை நிறுவனமானது, 2014 ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் கொழும்பிலிருந்து ஹொங்கொங்கிற்கு நான்கு முறை இடைவிடாத விமானங்களை இயக்கி இலங்கையில் தமது சேவைகளை விஸ்தரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய மேம்படுத்தல் மூலம் கொழும்பிலிருந்து ஹொங்கொங்கிற்கு கால அட்டவணை கொண்ட நேரடி விமானங்களை இயக்கும் ஒரேயொரு விமானசேவை நிலையமாக Cathay Pacific திகழவுள்ளது. இதனூடாக வாரத்தில் மூன்று முறை பெங்கொக் ஊடாக இயக்கப்படும் விமானசேவை இனிமேல் நாளாந்தம் கொழும்பிலிருந்து இயக்கப்படவுள்ளது.
இந்த புதிய கொழும்பு - ஹொங்கொங் நேரடி விமானங்கள், Cathay Pacific இன் விருது வென்ற புதிய கட்டண பொருளாதார மற்றும் பொருளாதார வகுப்பு இருக்கைகள் கொண்ட நீட்ட வசதியான வணிக வகுப்பு இருக்கைகள் கொண்ட Airbus ஏ330-300 மூலம் இயக்கப்படவுள்ளன. Cathay Pacific இன் சர்வதேச வலையமைப்பு ஊடாக ஹொங்கொங் அல்லது ஏனைய இடங்களுக்கு பயணிக்கும் போது இந்த நேரடி விமானங்கள் மூலம் பயணிகள் சௌகரியத்தையும், வசதியையும் பெற முடியும்.
Cathay Pacific நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உள்நாட்டு முகாமையாளர் எனா சோய் கருத்து தெரிவிக்கையில், 'Cathay Pacific நிறுவனம் இலங்கையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை வழங்கி வருவதுடன், இது எமக்கு மிக முக்கிய சந்தையாக விளங்குகிறது. இந்த சேவை விஸ்தரிப்பானது, இலங்கை மற்றும் ஹொங்கொங் நகரங்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த உதவுவதுடன், முன்னணி வான்வழி மையமாக ஹொங்கொங்கினை ஸ்திரப்படுத்துகிறது. இலங்கையிலிருந்து பயணிக்கும் வாடிக்கையாளருக்கு எமது விருது வென்ற வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் புதிய ப்ரீமியம் பொருளாதார உற்பத்தி போன்றவற்றின் அனுபவத்தை பெறமுடியும் என எதிர்பார்க்கின்றோம்' என தெரிவித்தார்.
'ஆசியாவின் மிக அற்புதமான நகரங்களுக்கு பயணிக்கும் பிரயாணிகளின் பிரயாண நேரத்தை குறைத்திடும் கொழும்பு மற்றும் ஹொங்கொங் நகரங்களுக்கிடையே நேரடி விமானங்கள் இயக்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். முன்னணி சுற்றுலாத்தளமாக ஹொங்கொங் காணப்படுவதுடன், கொழும்பிலிருந்து டிஸ்னிலாண்ட் மிக அருகாமையில் அமைந்துள்ளது. இந்த புதிய விமானங்கள் எமது பிரயாணிகளை சீனா, ஜப்பான், கொரியா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள இடங்களுடன் இணைக்கவுள்ளது' என Cathay Pacific இன் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் விஷ்ணு ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த புதிய சேவை மேம்படுத்தல்களுடன், எமது சிங்கப்பூர் பயணிகள் பெங்கொக் ஊடாக எமது சேவைகளை பெற முடியும்.
