
களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலம் CFL மற்றும் GLS மின்குமிழ்கள் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய தயாரிப்புகள் அண்மையில் கொழும்பு தாஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இலங்கையில் முதல் தர நிறுவனமாக திகழும் களனி கேபின்ஸ் பிஎல்சி, CFL தயாரிப்புகளை 'பாதுகாப்பான வழிமுறைகளின் ஊடாக ஒளியை நோக்கி' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக அறிமுகம் செய்திருந்தது.
களனி CFL குமிழ்கள் அதிகளவு பணத்தை சிக்கனப்படுத்தும் வகையிலும், நீண்ட ஆயட்காலத்தை வழங்கும் வகையில் உதிரிப்பாகங்களை கொண்டும் ஒன்றரை வருட காலப்பகுதிக்கு உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது.
புதிய CFL குமிழ்கள், சர்வதேச தரங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. எனவே இலங்கை சுனித்யா வலு அதிகார சபையிடமிருந்து நட்சத்திர சான்றிதழை பெற்றுள்ளதுடன், இலங்கை கட்டளைகள் நிறுவனத்திடமிருந்து அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மேலும் சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தரச்சான்றான ISO 9000:14000 எனும் சான்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
களனி CFL மின்குமிழ்கள் மின்வழங்கலில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையை பொறுத்தமட்டில் மின்சாரம் கூடிக்குறைவது சாதாரண விடயமாக அமைந்துள்ளது. அத்துடன் உலகளாவிய ரீதியில் CFL மின்குமிழ்களை உற்பத்தி செய்வதற்கு பின்பற்றப்படும் பாதுகாப்பான தொழில்நுட்பமான 'அமல்கம் தொழில்நுட்பம்' பயன்படுத்தப்படுகிறது.
எனவே பாதரசத்தின் கசிவின் காரணமாக மனித உடலுக்கு ஏற்படக்கூடிய சகலவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாத்திடும் வகையில் அமைந்துள்ளது. இந்த மின்குமிழ்களின் மேற்பரப்பின் மீது காணப்படும் ட்ரைபொஸ்பர் மேற்பூச்சானது இந்த வகையான குமிழ்களிலிருந்து வெளியேறும் UV கதிர்களால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மின்குமிழின் தொடர்ச்சியான பாவனையின் காரணமாக ஏற்படக்கூடிய மங்கல் தன்மையையும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த புதிய CFL மின்குமிழ்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், 'சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததன் மூலமாக இந்த புதிய CFL மின்குமிழ்களை சந்தையில் அறிமுகம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இலங்கைக்கு பொருந்தும் வகையில் இந்த மின்குமிழ்கள் அமைந்துள்ளன. இந்த வலுச்சேமிக்கும் தன்மை வாய்ந்த CFL மின்குமிழ்களை இலங்கையில் அறிமுகம் செய்வதையிட்டு களனி கேபிள்ஸ் பிஎல்சி பெருமையடைகிறது. இந்த வகையான மின்குமிழ்களை நாம் அறிமுகம் செய்வதன் மூலம் தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு எம்மாலான பங்களிப்பை நாம் வழங்கியுள்ளோம்.
இந்த செயற்பாட்டில் வாடிக்கையாளர்களும் தற்போது பங்குகொள்ள முடியும். தமது தேவைகளுக்கு களனி கேபிள்ஸ் CFL மின்குமிழ்களை பயன்படுத்துவதன் மூலம் தமது மின்சார பட்டியல் கட்டணத்தை குறைத்துக் கொள்ள முடிவதுடன், தேசத்துக்கும் பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.
சகல வீடுகளுக்கும் அத்தியாவசியமான வீட்டுத்தேவை பொருளாக இலத்திரனியல் மின்குமிழ் அமைந்துள்ளது. எமது கம்பனி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை கொண்ட மின்குமிழை சகாய வலையில் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விசேடமாக, வீடுகளில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த புதிய வகை மின்குமிழ்களின் மூலம் அதிகளவு நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள் என பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால மேலும் குறிப்பிட்டார்.
இந்த பாதுகாப்பான துருப்பிடிக்காத களனி CFL குமிழ்கள் கரையோர பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கும், கட்டிடங்களுக்கும் பொருத்தமானவையாக அமைந்துள்ளன. புதிய மின்குமிழ்கள் 5W முதல் 80W எனும் வலு அளவுகளில் வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ளன.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 43 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல்கள் துறையில் 'சுப்பர் பிராண்ட்ஸ்' தர விருதையும் 2008ஆம் ஆண்டில் களனி கேபிள்ஸ் பெற்றுள்ளது.