
பரந்தளவில் உபயோகிக்கப்படும் சமூக செயதிகள் பரிமாறிக்கொள்ளும் ஆப்ளிகேஷனான Nimbuzz உடன் ஹட்ச் பங்குடைமை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் மூலம் 6 மாத காலப்பகுதிக்கு இலவசமாக இநத Nimbuzz ஆப்ளிகேஷனை ஹட்ச் கையடக்க தொலைபேசியில் உபயோகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த Nimbuzz ஆப்ளிகேஷனை 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை இலவசமாக உபயோகிப்பதற்கான வாய்ப்பை ஹட்ச் ஏற்படுத்தியுள்ளது. Nimbuzz என்பது ஒரு Chat ரக ஆப்ளிகேஷன் ஆகும். நண்பர்களுடன் மிகவும் வேகமாக எந்தவொரு yahoo, Gtalk அல்லது Facebook கணக்கின் ஊடாகவும் துரிதமாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்துளளது.
இந்த திட்டம் குறித்து ஹட்ச் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், 'Nimbuzz உடனான எமது சிறப்பு பங்குடமை உடன்படிக்கையின் மூலம், எமது வாடிக்கையாளர்களுக்கு மேலும் அனுகூலம் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாம் மேற்கொண்டு வரும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த உயர் நிலைகளில் காணப்படும் ஆப்ளிகேஷன் வடிவமைப்பாளர்களுடனான பங்குடமை நடவடிக்கைக்கு அமைவாக இதுவும் அமைந்துள்ளது. இந்த உடன்படிக்கைகள் நாட்டின் வௌ;வேறு பிரதேசங்களில் நிலவும் தொடர்பாடல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஹட்ச் நிறுவனத்துக்கு உதவியாக அமைந்துள்ளன. பாவனையாளர்களுக்கு அதிகளவு பெறுமதி சேர்ப்பதில் நிறுவனம் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் எமது வர்த்தக நாமத்தின் உறுதி மொழியை நிறைவேற்ற எமக்கு முடிந்துள்ளதாக நாம் கருதுகிறோம். இலங்கையில் Nimbuzz உடன் பங்குடமை அடிப்படையில் சேவைகளை வழங்க நாம் முன்வந்துள்ளமையானது, இலங்கையின் கையடக்க தொலைபேசி தகவல் பரிமாற்றல் சேவைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என நாம் நம்புகிறோம்' என்றார்.
Nimbuzz இன் பிரதம நிறைவேற்று அதிகாரி விகாஸ் சக்சீனா கருத்து தெரிவிக்கையில், 'Nimbuzzஐ சேர்ந்த நாம் இந்த உடன்படிக்கை குறித்து பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்கால கையடக்க தொடர்பாடல் வலையமைப்பு என்பது தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் ஒன்றிணைவதன் மூலம் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த உடன்படிக்கையானது இலங்கையில் ஹட்ச் நிறுவனத்தின் பிரசன்னத்தை மேலும் உறுதி செய்ய வழிகோலுவதாக அமையும்' என்றார்.
இந்த கையடக்க தொலைபேசி ஆப்ளிகேஷன் ஆனது, 3G தரம் வாய்ந்த கையடக்க தொலைபேசிகளில் மட்டுமல்லாமல், 2G தரம் வாய்ந்த கையடக்கதொலைபேசிகளிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் இலங்கையிலுள்ள சகலருக்கும் இந்த ஆப்ளிகேஷனை பயன்படுத்தி அனுகூலமடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தனது 3G வலையமைப்பு சேவைகளை அறிமுகம் செய்திருந்தமையை தொடர்ந்து, ஹட்ச் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ச்சியான வரவேற்பை பெற்று வருவதுடன், உயர் தரம் வாய்ந்த புரோட்பாண்ட் டேடா சேவைகளையும் வழங்கி வருகிறது.