2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வருடாந்தம் 400 மில்லியன் மக்களை காவு கொள்ளும் Cybercrime

A.P.Mathan   / 2014 மே 20 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


Microsoft நிறுவனத்தினால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் Pirated Software Install செய்யப்பட்ட கணினிகளில் 69% சதவீதமான கணினிகள் Malware தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் மற்றும் 15% சதவீதமான கணினிகளில் 97% சதவீதம் Firewall சட்டவிதிகள் மாற்றப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

பிராந்திய பணிப்பாளர் IP & Cybercrime Microsoft Asia Pacific Japan & Singapore, கேஷவ் டகாட் கூறுகையில், புதிதாக கணினிகள் கொள்வனவு செய்யும் போது அவற்றில் Install செய்யப்பட்டிருக்கும் Pirated Softwareகளிலேயே மேற்கூறப்பட்ட தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது அதுமட்டுமல்ல பாவனையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் திருட்டு DVD'sகளில் இந்த தாக்கம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவானது பெரும் அச்சத்தை அளித்திருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவை ஆய்வுக்கு தெரிவு செய்ய காரணம் Pirated Software கூடுதலாக பயன்படுத்துவதனாலேயே ஆகும். ஒவ்வொரு வருடமும் Genuine & Legal Softwareகளை Install செய்து விற்கப்படும் கணினிகளை விட Pirated Software Install செய்து விற்கப்படும் கணினிகளே அதிகம். திருட்டு மென் பொருட்கள் Install செய்துள்ள கணினிகள் Cybercrimeக்கு இலக்காகுகிறதா? என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அதன் விடை தான் ஆம் Cybercrimeக்கு இலக்காகிறது. இதன்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 282 கணினிகளில் 1100 Malwareகளால் தாக்கத்திற்குள்ளாகி இருந்தது. இந்த ஆய்வு ஆடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள எம்மைத் தூண்டியிருக்கிறது.

மேலும் இந்த கணினிகளில் Firewall சட்ட விதிகள் Windows Update ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். என்றார்.

இது ஒரு குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனென்றால் Pirated Sowftware பயன்படுத்தும் கணினிகளில் Update இல்லாத காரணத்தினால் வலுவிழக்கிறது. இதனை பாவனையாளர்கள் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு செய்வதனால் Hackersகளுக்கு தரவுகளை திருடுதல், வங்கிக் கணக்கு திருட்டு உட்பட பல குற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

அமெரிக்காவின் FBI நிறுவனத்தால் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த Malwareக்கள் கணினியில் Install ஆகினால் அது கணினி விசைப்பலகையில் (Computer Keyboard) அழுத்தும் எழுத்துக்களையும் பதிவு செய்யும். இது வங்கி கணக்கின் இரகசிய குறியீடு, பிறந்த திகதி, சமூக பாதுகாப்பு குறியீட்டு இலக்கம் போன்றவற்றை Hackersக்கு விரைவாக அனுப்பும். அதுமட்டுமல்லாமல் இந்த Malwareகள் கணினியில் உள்ள Webcame மற்றும் Micro Phoneகளையும் On செய்து செயற்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

இது எவ்வாறு உருவாகிறது என்றால் தாக்கத்திற்குள்ளான கணினியில் இருந்து மற்றுமொரு கணினிக்கு மின்னஞ்சல் அனும்பும் போதும், Pendriveகளில் இருந்தும் ஊடுருவும் மற்றும் இந்த குற்றவாளிகளால் denial of service attacks மூலம் பாதிப்புக்குள்ளான கணினியில் இருந்து பாதிக்காத கணினியை தாக்க முடியும் மற்றும் இணையத்தளங்களையும் தாக்கும் ஆற்றல் படைத்தவை.

குற்றவாளிகள் மூலம் தயாரிக்கப்படும் இந்த Malwareக்கள் நாளாந்தம் பாவனையாளர்களிடம் இருந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அன்றாட நாளாந்த பாவனையாளர்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு இதற்கு வர்த்தக நடவடிக்கைகளில் பணத்தை கொள்ளையிட முடியும். அதோடு முக்கியமான அரச சேவைகள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை நிறுத்த முடியும். இதற்கு பாதுகாப்பான ஒரு செயற்பாடு மேற்கொள்ள வேண்டுமாயின் Genuine & Legal Software பயன்படுத்த வேண்டும். அத்தோடு நம்பிக்கையான பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப முகவர்களிடம் இருந்து இதனைப் பெற்றுக் கொள்ளவும் வேண்டும் என்றார்.

பல ஆய்வுகளின் அடிப்படையில் வருடாந்தம் அன்றாடம் இணைய பாவனiயாகர்களிடம் இருந்து சுமார் 113 பில்லியன் ரூபா குற்றவாளிகளினால் கொள்ளையிடப்படுகிறது. ஒவ்வொரு செக்கனுக்கும் 12 பேர் Cybercrimeக்கு உள்ளாகிறார்கள். வருடாந்தம் 400 மில்லியன் பேர் பாதிப்படைகிறார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X