
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம், பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.780 மில்லியன்) முதலீடாக பெற்றுள்ளது. வளரும் நாடுகளுக்கான பெல்ஜிய முதலீட்டு நிறுவனத்திடமிருந்து BIO) இம் முதலீட்டினை CDB பெற்றுக் கொண்டுள்ளது. இப் பன்னாட்டு முதலீடானது நிலையான வட்டி வீதத்தையுடைய 4 வருட மீளளிப்பு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
BIO மூலம் CDB நிறுவனத்தின் ஆரம்பத்துறை குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இம்முதலீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. CDB நிறுவனத்தின் நிதி அடிப்படைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் தவிர்த்து, CDB யின் வியாபார கட்டமைப்பான நகர்புற முதலீடு, கிராமப்புற கடன் வழங்கல் மூலம் கிராமிய பொருளாதாரத்திற்கு வலுவூட்டுவதோடு, CDB யின் கடன் வழங்கல் கட்டமைப்பு ஒழுங்குமுறையின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்கொண்ட பங்களிப்பினை இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் பல விடயங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இம் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள வலுவான தனியார் துறைக்கு ஆதரவளித்து அதனூடாக மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் அவர்களை வளர்ச்சி மற்றும் நிலையான அபிவிருத்தியுடன் செயற்பட வைப்பதே BIO இன் குறிக்கோளாகும். உள்நாட்டு நிதித்துறையை மேம்படுத்தல் மற்றும் ஒன்றுதிரட்டல், மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு நீண்டகால நிதி வசதிகளை வழங்கல், ரனெநசளநசஎநன சந்தைகளில் முக்கிய பங்கு வகித்தல், மூலதன அணிதிரட்டலில் முக்கிய பாத்திரமேற்றல் மற்றும் புத்துருவாக்க தீர்வுகள்/ தயாரிப்புகளை வழங்குதல் ஆகியன BIO இன் குறிக்கோள்களினுள் அடங்கும்.
இம் முதலீடு குறித்து CDB நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், 'BIO உடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த முதற்படியை எதிர்காலத்தில் BIO உடன் மிக நீண்டகால பங்காண்மையாக மாற்றமடையச் செய்வது குறித்து நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது ஆற்றலிற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்த இப்புதிய நிதி மூலத்தை தவிர்ந்து, BIO மூலம் எதிர்பார்க்கப்பட்ட முழுமையான செயல்முறையை CDB கொண்டிருந்தமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், போருக்கும் பின்னரான இலங்கையின் பொருளாதார அபிவிருத்திகளுக்கு ஆதரவு வழங்க எண்ணியுள்ளோம்' என்றார்.
CDBஇன் நிறைவேற்று பணிப்பாளரும்/ COO மற்றும் பெருநிறுவன நிதிப் பிரிவின் தலைவருமான ரொஷான் அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இது எமது சேமிப்பு மற்றும் வைப்புக்களை முழுமைப்படுத்தி கடன் நிதியப்பிரிவினை விஸ்தரித்துக் கொள்வதற்கான மிக முக்கிய மைல்கல்லாகும். எமது சொத்து, பொறுப்பு முதிர்ச்சி மேலாண்மைச் செயல்முறையை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு செலுத்தும் வகையிலும், கடன் நிதி இலாகாவினை நீண்டகாலத்திறத்கு மேம்படுத்தும் வகையிலான மூலோபாயங்கள் குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். இம் முதலீட்டு தொகையானது எமது முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும்' என்றார். கட்டமைத்தல், பேச்சுவார்த்தை நடத்தல் மற்றும் இழப்பீட்டு எல்லை ஏற்பாடுகள் செயல்பாடுகள் ஆகியன முழுமையாக CDB நிறுவனத்தின் பெருநிறுவன நிதிப்பிரிவின் மூலம் கையாளப்படும். CDB பெருநிறுவன நிதிப்பிரிவானது CDB இன் கடன் நிதியம் ரூ.4.2 பில்லியன்கள் என அறிவித்துள்ளது.
CDB நிறுவனத்தின் உள்நாட்டு நாணயக் கடன் தள்ளுபடி செய்ய தீர்மானித்த BIO வின் நாணய அபாயமானது, அம்ஸ்டடாமில் உள்ள நாணய பரிமாற்று நிதியத்தின் (TCX) மூலம் இழப்பீடு கைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் நிதியத்தின் பங்காளாராக BIO செயற்பட்டு வருகிறது. இம் முதலீட்டினை கட்டமைப்பதில் BIO உடன் இணைந்து செயலாற்றிய ஜெரோமி பிரோ கருத்து தெரிவிக்கையில், 'கடந்த சில வருடங்களாக எமது பங்குதராரர்கள் ஊடாக இலங்கையில் உள்நாட்டு நாணய முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பில் உன்னிப்பாக கவனித்து வந்தோம். அந்நிய நேரடி முதலீடுகள் காரணமாக ரூபாவின் மதிப்பு உயர்வடைந்துள்ளது. இதனால் எமது உள்ளாட்டு நாணய பரிமாற்றல்களின் தொடக்கத்தை மேம்படுத்துவதற்கான அதிகாரம் கிடைத்துள்ளதுடன், எமது பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நாணய ஆபத்திற்கு இழப்பீட்டு கைகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளது' என்றார்.
வளரும் நாடுகளுக்கான பெல்ஜிய முதலீட்டு நிறுவனத்தின் நிதிப்பிரிவின் பணிப்பாளரான கரோல் மமன் கருத்து தெரிவிக்கையில், 'முதலீட்டு அபிவிருத்தி நிறுவனம் எனும் ரீதியில், BIO ஆனது நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு நிதி வசதிகளை வழங்கும் நோக்கில் செயற்பட்டு வருகிறது. இலங்கையின் கிராமங்கள் மற்றும் பிரமிட் வாடிக்கையாளர்களுக்கு முழு அளவிலான நிதிச் சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் நிதி நிறுவனத்திற்கு முதலீட்டுத்தொகை வழங்கியதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். CDB நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் தரம் மற்றும் ஊக்குவிப்புக்கள் மற்றும் அதன் ஊழியர்களின் திறன்கள் மற்றும் தொழில்சார் அனுபவத்தை அபிவிருத்தி செய்வதற்கான அர்ப்பணிப்பை நாம் பாராட்டுகிறோம்' என தெரிவித்தார்.