2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பசுமை உலகினை ஊக்குவிக்கும் CDB லீசிங்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம் அதன் வாடிக்கையாளர் தளத்திற்கு, போட்டிமிக்க வட்டி விகிதங்களை கொண்ட புதுமையான லீசிங் தீர்வுகளை வழங்குவதனூடாக ஹைபிரிட் கார் சந்தையில் தடம் பதித்துள்ளது.
 
'மாசற்ற சூழலை பேண உதவும் வாகனங்களை ஒட்டுவதன் மூலம் ஹைபிரிட் கார் உரிமையாளர்கள் தேசத்திற்கு பெரும் சேவையாற்றி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, 'Lesser burden on your pocket, greener for the planet' எனும் கருப்பொருளின் கீழ் நாம் விசேட திட்டமொன்றை வழங்கவுள்ளோம்' என CDB  நிறுவனத்தின் பணிப்பாளரும் மற்றும் பிரதம கடன் அதிகாரியுமான சசிந்தர முனசிங்க தெரிவித்தார்.
 
மேலும் CDB நிறுவனமானது நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மர நடுகையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாகச் சென்று மர நடுகை திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
 
CDB நிறுவனமானது தற்போது Toyota Aqua, Toyota Prius, Axio Hybrid மற்றும் Honda Fit உள்ளிட்ட சந்தையில் உள்ள அனைத்து வகையான ஹைபிரிட் வாகனங்களுக்கும் விசேட வட்டி விகிதத்துடன் கூடிய நெகிழ்ச்சித் தன்மை கொண்ட மீள்கொடுப்பனவு திட்டத்தினை (flexible repayment plan) வழங்கி வருகின்றது.
 
CDB வாடிக்கையாளர்கள் தற்போது தங்களின் டயலொக் மற்றும் எட்டிசலாட் கையடக்க தொலைபேசிகளின் ஊடாக மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளை செலுத்த முடியும். மேலும் EZCash உடனான இணைப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 14,000 க்கும் மேற்பட்ட eZ cash நிலையங்களின் ஊடாகவும் தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.
 
'எமது வாடிக்கையாளர்களுக்கு விரைவானதும், சௌகரியமானதுமான சேவையை வழங்கும் நோக்கிலேயே நாம் eZ cash உடன் கைகோர்த்தோம். எமது வாடிக்கையாளர் சேவையானது, சந்தையில் தனித்துவம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் நாம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றோம்' என முனசிங்க தெரிவித்தார்.
 
ஹைபிரிட் வாகனங்கள் தவிர்ந்து, CDB ஆனது அதன் போட்ஃபோலியோவை விஸ்தரிக்கும் வகையில் அதன் மூலோபாய திட்டத்தின் ஓர் அங்கமாக புதுமையான லீசிங் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது.
 
'நாம் பெண்களுக்கான விசேட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதுடன், வாகனமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு தனித்துவமான திட்டங்களையும் வழங்கி வருகின்றோம். இது கூட்டாண்மை மற்றும் இயந்திர லீசிங் போன்ற துறைகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான CDB திட்டத்தின் ஓர் அங்கமாகும். இதற்கு சான்றாக, நாம் சுற்றுலா, கட்டுமானம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில்; தடம் பதிக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த துறைகளில் வளர்ச்சிக்கு ஏதுவாக, எமக்கு சொந்தமான லீசிங் போர்ட்ஃபோலியோவை விஸ்தரிக்க மற்றும் பன்முகப்படுத்த எண்ணியுள்ளோம்' என மேலும் முனசிங்க தெரிவித்தார்.
 
CDB இன் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட லீசிங் கொள்கைகள், வருமான வேறுபாடுகளுக்கு அமைய வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பொருளாதார நெருக்கடிகளின் போது குறைந்த வாடகையையும், வருமானம் கூடுதலாக கிடைக்கும் காலப்பகுதியில் அதிக கட்டணத்தையும் செலுத்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
CDB இன் அனைத்து கிளை வலையமைப்புகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து லீசிங் வசதிகளையும் எவ்விதமான தொந்தரவுகளுமின்றி உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
 
நாட்டில் பட்டியியலிடப்பட்ட மிகச்சிறந்த ஐந்து வங்கியல்லாத நிதிசார் நிறுவனங்களில் (NBFIs), சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமும் ஒன்றாகும். நிதிச் சேவைகள் துறையில் முன்னணி நிறுவனமான CDB தற்போது 59 கிளைகள் மற்றும் சேவை நிலையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X