2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனசக்தி MDRT தகுதி பெற்றவர்கள்

A.P.Mathan   / 2014 ஜூலை 08 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனத்தின் ஐந்து பணியாளர்கள் 2014 ஆம் ஆண்டுக்கான MDRT வருடாந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமது வெற்றிக்கு களம் அமைத்துக் கொடுத்த ஜனசக்திக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 2014 / 2015 ஆம் ஆண்டுக்கான ஜனசக்தி ஆனுசுவு வெற்றி கழகத்தில் புதிதாக 25 பணியாளர்கள் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
ஜனசக்தி நிறுவனத்தின் ஹட்டன் கிளையைச் சேர்ந்த ருவன் குமார தற்போது ஜனசக்தி MDRT வெற்றிக் கழகத்தின் தலைவர் பதவியை வகிக்கிறார். அவர் 18 வருடங்களாக ஜனசக்தி காப்புறுதியில் பணியாற்றுகிறார். இருப்பினும் அவர் மிக நீண்ட நாளாக எதிர்பார்த்த, ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் மில்லியன் டொலர் வட்டமேசை நிகழ்வுக்காக முதல் தடவை தெரிவு செய்யப்பட்டமையை அவரது தொழில் வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வாக கருதுகின்றார். ஏற்கனவே அவர் இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்பதற்கு 10 தடவைகள் தகுதியை பெற்றுள்ளதுடன், இதுவே அவரை மில்லியன் டொலர் வட்டமேசை நிகழ்வில் வாழ்நாள் கால உறுப்புரிமையை பெற வழிவகுத்துள்ளது. 
 
'MDRT இற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் அங்கத்தவர்களுள் ஒருவராக உள்ளேன். MDRT இற்கு 10 தடவைகள் தகுதியை பெற்றுக்கொள்வதே எனது ஒரே இலக்காக அமைந்தது. எனவே நான் மீண்டும் தெரிவானதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் - இந்நாள் என் வாழ்வின் மிகச்சிறந்த நாளாகும்' என கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் இடம்பெற்ற MDRT வெற்றி கழகத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ருவன் குமார தெரிவித்தார்.
 
இரண்டாவது முறையாக தகுதியை பெற்றவரும், கம்பஹா கிளையைச் சேர்ந்தவருமான அனோமா பெரேரா, இந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெறுவதற்குரிய பல அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். 'எனக்கு தலைமைக்காரியாலயங்களில் இருந்து முழு ஆதரவு கிடைத்தது. மேலும் எனது முகாமையாளர் தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து சகல உதவிகளையும் செய்தார். இதுவே இரண்டாவது முறையாகவும் இலக்கை அடைவதற்கு எனக்கு உதவியது' என அனோமா கூறினார். ருவன் குமார மூலம் உத்வேகத்தை பெற்றதாகவும், MDRT நிகழ்வில் பல தடவைகள் பங்குபற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, நீர்கொழும்பைச் சேர்ந்த கிறிஷாந்த அப்புஹாமி, அவரது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கிய ஜனசக்தி நிறுவனத்திற்கு தமது நன்றியை தெரிவித்தார். ஒரு காலத்தில் வேலைக்கு செல்வதற்கே வாகனமொன்று இல்லாத நிலையில், தற்போது பல வாகனங்களுக்கு சொந்தக்காரராக உள்ளதுடன், பல தடவைகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். மேலும் அவர் தன் குடும்பத்திற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதுடன், அவரது மகள் நாட்டின் முன்னணி சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கிறாள். 'எனது வாழ்க்கைத் தரத்தை இந்தளவு தூரம் மேம்படுத்திக் கொள்ள ஆதரவு வழங்கிய ஜனசக்தி நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒவ்வொரு நாளும் எனது இலக்குகளை வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன்' என கிறிஷாந்த தெரிவித்தார்.
 
தலைமைக்காரியாலயத்தை சேர்ந்த அமில ஹர்ஷன தான் மிகவும் கடினமான பாதையை கடந்து வந்ததாக சுட்டிக்காட்டினார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனசக்தியுடன் இணைந்து கொண்ட அமில, 2008ஆம் ஆண்டில் MDRT வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
 
ஜனசக்தி நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளையைச் சேர்ந்த தீபா மற்றுமொரு MDRT தகுதியை பெற்றவராவார். ஒரு ஆசிரியையாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கிய தீபா அத் தொழிலில் சிரமங்களை எதிர்நோக்கினார். அதன் பின்னர் ஜனசக்தி நிறுவனத்தில் பகுதி நேர அடிப்படையில் பணிபுரிய தொடங்கிய அவர், படிப்படியாக தம்மை மேம்படுத்திக் கொண்டார். தன் குடும்பத்திற்கு ஆதரவு வழங்க தன்னால் முடிந்துள்ளதாகவும், MDRT தகுதியை பெறுவதற்கான தனது கடின உழைப்பை எண்ணி பெருமையடைவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் யாழ்ப்பாணக் கிளையில் முன்னோக்கிச் செல்ல விரும்பியதாகவும், ருவன் குமாரவை போல மிக உயர்ந்த நிலைக்கு செல்வதே தனது குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.
 
இந்த சாதனை குறித்து ஜனசக்தி நிறுவனத்தின் ஆயுள் (விற்பனை மற்றும் செயற்பாடுகள்) பிரிவின் பொது முகாமையாளர் ஹர்ஷ வீரவர்தன கருத்து தெரிவிக்கையில், 'ருவன் குமார MDRT USA இற்கு செல்ல 10 தடவைகள் தகுதி பெற்றதையிட்டு ஓர் ஊக்கம் ஏற்படுகிறது. மேலும் எமது விற்பனை ஊழியர்களுக்கு ஓர் உத்வேகத்தை வழங்குவதையிட்டு பெருமையடைகிறோம்' என்றார்.
 
MDRT என்பது பங்குபற்றுனருக்கு நாளாந்த செயற்பாடுகளுக்கு உதவிடும் வகையில் தேவையான உள்ளாற்றலை வழங்கும் தொழிற்துறை கூட்டமைப்பாகும். இந்த பெருமைக்குரிய நிகழ்வில் மேலும்  பல பணியாளர்கள் கலந்து கொள்ள தகுதியை பெறச்செய்ய எதிர்பார்த்துள்ளோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X