2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மைக்ரோசொவ்ட் O365 Cloud உடன் இணைந்துள்ள ஒரேன்ஜ் எலெக்ரிக்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கையில் மின் மற்றும் மின்குமிழ் உற்பத்திப் பொருட்களின் முன்னோடியாகத் திகழும் ஒரேன்ஜ் நிறுவனம் தமது வர்த்தக நடவடிக்கைகளை சர்வதேசமயப்படுத்தும் நோக்கிலும் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் முகமாகவும் மைக்ரோசொவ்ட் O365 Cloud சேவையுடன் இணைந்துள்ளது. Orel கோர்பரேஷனானது தற்போது மின் தொலைத்தொடர்பு துறைகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதுடன் இதனூடாக வழங்கப்படும் சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கமாகவே மைக்ரோசொவ்ட் O365 Cloud சேவையுடன் இணைந்துள்ளது. மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா O365 Cloud ஐ ஒரேல் நிறுவனத்துக்கு செயல்படுத்துவதன் மூலம் அதனூடாக Microsoft Office, Microsoft SharePoint, Microsoft Exchange Online மற்றும் Microsoft Lync ஆகிய வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
 
ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. குஷான் கொடிதுவக்கு மற்றும் மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினதும், மாலைத்தீவினதும் வதிவிட முகாமையாளர் திரு. இம்ரான் வில்கசீம் ஆகியோருக்கும் இடையில் இந்த நிறுவன ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
 
ஒரேன்ஜ் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பகுதி பாரிய உற்பத்தி பகுதிகளில் அசல் மென்பொருட்களை கொண்ட அமைப்பே இணைந்திருந்தது. ஆனாலும் குழுவின் உயர் தேவைகளைக் கருத்திற் கொண்டு ஒரேன்ஜ் நிறுவனம் மைக்ரோசொவ்ட் O 365க்கு மாற தீர்மானித்தது என இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட Orel கோர்பரேஷனின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியா, ஆசிய பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பிராந்தியங்களில் பாரிய விஸ்தரிப்பை மேற்கொண்டு வரும் ஒரேன்ஜ் நிறுவனம், O 365இல் உள்ள Lync Online போன்ற சேவைகளின் வாயிலாக தமது சர்வதேச பங்குதாரர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஒரு சிறந்த அடித்தளமாகவும் இது அமைகின்றது எனவும் தெரிவித்தார்.
 
மைக்ரோசொவ்ட் O 365ஐ தமது ஊழியர்கள் பயன்படுத்துவதன் ஊடாக அதன் தொழில்நுட்ப வசதிகள் மூலம் தகவல் தொழில்நுட்ப பகுதியில் சிறந்து விளங்குவதற்கு மட்டுமன்றி நிறுவனத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்குமென Orel கோர்பரேஷன் கருதுகிறது. 'இந்த அனைத்து மட்டங்களிலும் ஊழியர்களின் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவரும் முகமாக வெவ்வேறு பரிமாணங்களில் முயற்சிகளை மேற்கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும்.'  
 
மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினதும், மாலைத்தீவினதும் வதிவிட முகாமையாளர் இம்ரான் வில்கசீம் கூறுகையில், O 365 பாவனையின் ஊடாக ஒரேன்ஜ் இலெக்ரிக் போன்ற நிறுவனங்களுக்கு அவர்களது நன்மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்கு மட்டுமன்றி அதில் காணப்படும் சிறப்பியல்புகளைப் பயன்படுத்துவதன் ஊடாக நவீனமயமாக்கிக் கொள்ளவும் வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .