2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நஷனல் PVC தனது மற்றுமொரு விநியோகத்தரை கொழும்பில் நியமித்துள்ளது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


நஷனல் PVC குழாய்கள் மற்றும் பொருத்திகள் உற்பத்தி செய்யும் சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி நிறுவனம், மத்திய கொழும்பில் தமது விநியோக நடவடிக்கைகளை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இல. 17 டீ, சென்ரல் வீதி, கொழும்பு 12 எனும் முகவரியில் அமைந்துள்ள வின்கெம் அக்ரிகெயார் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தை தமது புதிய விநியோகத்தராக நியமித்துள்ளது. 
 
வின்கெம் அக்ரிகெயார் நிறுவனம் பங்காளர்களான கருபன்னப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி பிரசன்னா மற்றும் கருப்பையா பாலசுப்ரமணியம் ஆகியோர் இப்பிரதேசத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த வர்த்தகர்களாக காணப்படுகின்றனர். இந்த நிகழ்வில் பெருமளவான நலன் வர்த்தகர்கள் மற்றும் ஹார்ட்வெயார் விநியோகத்தர்கள் போன்றோர் பங்குபற்றியிருந்தனர். 
 
புதிய விநியோக நிலையத்தினூடாக ஆமர் வீதி, மெசென்ஜர் வீதி, பழைய சோனகத் தெரு, பண்டாரநாயக்க மாவத்தை, குவெரி வீதி, சென்ரல் வீதி மற்றும் புறக்கோட்டை வர்த்தக சந்தை ஆகிய பகுதிகளில் காணப்படும் விநியோகத்தர்களுக்கு விரைவான விநியோக சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், உயர்தரம் வாய்ந்த பொருட்கள் சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி மூலமாக விநியோகிக்கப்படுகிறது. நஷனல் PVC குழாய்கள் மற்றும் பொருத்திகள் ஆகியன சந்தையில் காணப்படும் நிர்மாண துறையை சேர்ந்தவர்களின் பிரதான தெரிவாக அமைந்துள்ளன. 
 
குழாய்கள் மற்றும் பொருத்திகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன் முறையாக SLS 147 மற்றும் 659 தரச்சான்றுகளை பெற்ற இலங்கையின் நிறுவனம் எனும் பெருமையை சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நிறுவனமானது மழை நீர் வழிந்தோடும் குழாய்கள், Flexi மற்றும் Rigid இலத்திரனியல் கொண்டுயிட்கள், சோல்வன்ட் சீமெந்து, குழாய்கள், நீர் தாங்கிககள், துருப்பிடிக்காத உலோக தாங்கிகள், கழிவுநீர் தாங்கிகள், தோட்ட நீர் பாய்ச்சும் குழாய்கள், நஷனல் கொம்பாக்ட் போல் வால்வுகள் மற்றும் கிரிப்டன் இலத்திரனியல் சுவிட்ச் வகைகள் போன்றவற்றை தமது தொழிற்சாலையில் உற்பத்தி செய்கிறது. 
 
நாட்டின் முன்னணி நிர்மாணத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் நஷனல் PVC தயாரிப்புகளை பயன்படுத்துகின்றன. விநியோக வலையமைப்பில் நாடு முழுவதையும் சேர்ந்த 30க்கும் அதிகமான விநியோகத்தர்கள் உள்ளடங்கியுள்ளனர். ஹார்ட்வெயார் சந்தையில் உயர் தரமான சேவைகளை வழங்குவதற்கு இந்த நடவடிக்கை பெருமளவு உதவியுள்ளது.
 
சென்ரல் இன்டஸ்ரீஸ் பிஎல்சி நிறுவனம் நிர்மாணத்துறையில் 25 வருட காலமாக சேவைகளை வழங்கி வருகிறது. எதிர்வரும் காலங்களிலும் இந்த துறைக்கு தனது சேவைகளை வழங்க தயாராகவுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .