2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'செலான் SURE' வெகுமதி வழங்கல் திட்டம்

A.P.Mathan   / 2014 ஜூன் 08 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியின் 'செலான் சுவர் (SURE)' வெகுமதி வழங்கல் திட்டமானது 12 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் நாடு முழுவதிலும் இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வாழ்க்கையுடன் இணைந்துள்ளது.

உண்மையிலேயே இலங்கையின் வங்கியியல் துறையில் இவ்வாறான முதலாவது முன்னெடுப்பாக திகழ்கின்ற இந்த தனிச்சிறப்புமிக்க 'செலான் SURE' வெகுமதி வழங்கல் திட்டமானது கடந்த 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக செலான் வங்கியின் வாடிக்கையாளர்களிற்கு பல எண்ணிலடங்காத வழிகளில், பரந்துபட்ட அனுகூலங்கள் மற்றும் பல வெகுமதிகளை வழங்கி வருகின்றது.

வாழ்க்கையின் நான்கு முக்கிய கட்டங்களான – திருமணம், குழந்தை ஒன்றின் பிறப்பு, சிரேஷ்ட பிரஜைகளின் பிறந்த தினங்கள் மற்றும் சத்திரசிகிச்சை ஆகியவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதுமையான வெகுமதி அளித்தல் முறைமையானது பரவலாக திறனாய்வு அடிப்படையிலான பாராட்டை பெற்றுக் கொண்டுள்ளது. திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்புக்காக வழங்கப்படும் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், வாடிக்கையாளர் தமது சாதாரண சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளில் தொடர்ச்சியாக 6 மாத காலத்திற்கு ரூபா 20,000 இனை நிலுவையாக பேணி வர வேண்டும். அதேபோல் தொடர்ச்சியாக 12 மாதங்கள் அத் தொகையை நிலுவையாக பேணிவந்தால் சத்திர சிகிச்சை மற்றும் 60ஆவது பிறந்த தினத்திற்காக கிடைக்கும் வெகுமதிசார் அனுகூலங்களை அனுபவித்துப் பயன்பெற முடியும்.

இது தொடர்பாக நாடெங்குமுள்ள தமது வாடிக்கையாளர்களிடம் இருந்து செலான் வங்கி பெற்றுக் கொண்ட வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பனவாக காணப்படுகின்றது. உண்மையில், செலான் வங்கியின் இரத்தினபுரி கிளையின் வாடிக்கையாளர்களுள் ஒருவரான எலபாத, கோட்டமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த சமாதான நீதவான் டபள்யூ.ஜி. உபாலி வீரசிங்கவிடம் இருந்து அண்மையில் கடிதமொன்று கிடைக்கப் பெற்றபோது மேற்படி கிளை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானது.

நன்றியுணர்வு கொண்டவரான திரு.வீரசிங்க இவ்வாறு எழுதியிருந்தார், 'நான் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்த ஒரு நேரத்தில் இரண்டு இலட்சம் ரூபாவை எனக்கு பண உதவியாக வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக உங்களுக்கும் உங்களது ஊழியர்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளையும் மனமார்ந்த நன்றியறிதலையும் இத்துடன் அனுப்பி வைப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். 'அன்புடன் அரவணைக்கும் வங்கியாக' திகழ்கின்ற செலான் வங்கியானது, நலிவுற்ற எனது இதயத்தின் பலவீனமான துடிப்பை உணர்ந்து கொண்டது மட்டுமன்றி, அது மரித்துப் போகாமல் பாதுகாக்கும் விதத்தில் மிகுந்த கருணையுடன் நிதிப் பங்களிப்பையும் வழங்கியது. அதனால் நான் இன்னும் கடனாளியாக இருக்கின்றேன். இலங்கையிலுள்ள ஏனைய அனைத்து வங்கிகளுக்கும் மத்தியில் உங்களது வங்கி மிக விரைவாக உயர்ந்த ஸ்தானத்திற்கு வளர்ச்சியடைவதற்கு நான் மிகவும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

'செலான் சுவர் வெகுமதி வழங்கல்' திட்டத்தின் மூலம் அனுகூலங்களை பெற்றுக்கொண்ட பெருமளவிலான வாடிக்கையாளர்களுள் ஒருவராக திரு. வீரசிங்க காணப்படுகின்றார். 'அன்புடன் அரவணைக்கும் வங்கியாக' திகழ்வதையிட்டு செலான் வங்கி பெருமிதம் கொள்கின்றது. பொதுமக்களின் இதயத்துடிப்பை மட்டும் நாம் உணர்ந்து கொள்வதில்லை மாறாக, இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களுடன் முழுமையாக ஒத்திசைந்து செயற்படுகின்ற வங்கியாகவும் காணப்படுகின்றோம். இலங்கை பிரஜைகளுக்கான எமது வங்கி கணக்குகள் மற்றும் சேவை வகைகளை தொடர்ச்சியாக புத்தாக்கம் செய்வதற்காகவும் மேலும் அதிக பெறுமதியை சேர்ப்பதற்காகவும்; நாம் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மக்கள் தொடர்பாக நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு சிந்தனையை 'செலான் சுவர்' ஆனது மேலும் ஒரு படி முன்னோக்கி கொண்டு செல்கின்றது' என்று செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் ரிலான் விஜயசேகர தெரிவித்தார்.

அதனது பெயர் குறித்துரைப்பதைப் போலவே, 'செலான் சுவர்' என்பது விஷேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வெகுமதி வழங்கல் திட்டமாகும். நடைமுறை மற்றும் சாதாரண சேமிப்புக் கணக்குகளில் (தனிப்பட்ட மற்றும் இணைந்த இரு கணக்குகளிலும்) ஆகக் குறைந்த மீதியாக ரூபா 20,000 இனை பேணி வருகின்ற கணக்கு வைப்பாளர்களுக்கு இத்திட்டம் பரிசுகளையும் பண வெகுமதிகளையும் கொண்டு வருகின்றது.

தமது கணக்கில் ஆகக் குறைந்த நிலுவையாக ரூபா 150,001 இனை பேணி வருகின்ற கணக்கு வைப்பாளர்கள் திருமணத்தின் போதும் ஒவ்வொரு குழந்தை பிறக்கின்ற வேளையிலும் ரூபா 15,000 விஷேட பண வெகுமதியை பெற்றுக் கொள்வார்கள்.

மேலும், செலான் வங்கியின் கணக்கு வைப்பாளர்கள் (கணக்கில் பேணுகின்ற நிலுவையின் அடிப்படையில்) தனியார் வைத்தியசாலை ஒன்றில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்ற வேளையில் ரூபா 200,000 வரையான நிதியுதவியையும், அரச வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்கின்ற போது ரூபா 100,000 வரையான நிதி உதவியையும் பெற்றுப் பயனடைய முடியும். இதில் 'கட்ரெட்க்' சத்திர சிகிச்சையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. செலான் வங்கியினால் வரையறை செய்யப்பட்டுள்ளபடி கணக்கு வைப்பாளரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் இவ்வசதி விஸ்தரிக்;கப்பட்டுள்ளது.

மேலும், சிரேஷ்ட பிரஜை கணக்கு வைப்பாளர்கள் அனைவரும் தம்முடைய 60ஆவது பிறந்த தினத்தில் பெறுமதிமிக்க கைக்கடிகாரம் ஒன்றை வெகுமதியாக பெற்றுக் கொள்வது மட்டுமன்றி, கணக்கில் பேணப்படுகின்ற நிலுவையின் அடிப்படையில் ரூபா 5,000 பணப் பரிசும் அவர்களுக்கு கிடைக்கும்.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட அடிப்படைகளில், அதாவது - ரூபா 20,000 தொடக்கம் ரூபா 30,000 வரை, ரூபா 30,001 தொடக்கம் ரூபா 60இ000 வரை, ரூபா 60,001 தொடக்கம் ரூபா 90,000 வரை, ரூபா 90,001 தொடக்கம் ரூபா 150,000 வரை மற்றும் ரூபா 150,001 மேல் என்ற விதத்தில் தமது வழக்கமான நிலுவைகளை பேணி வருகின்ற கணக்கு வைப்பாளர்கள் இவ்வகையான வெகுமதிகளுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இத்துறையில் நடைமுறையிலுள்ள எந்த வெகுமதி வழங்கல் திட்டத்தினாலும் வழங்கப்படுகின்ற வெகுமதிகளில் மிக உயர்ந்ததாக காணப்படுகின்ற இவ் வெகுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு மேற்படி அடிப்படைகளில் கணக்கு நிலுவையை பேணி வருதல் அவசியமாகும். 'செலான் சுவர்' திட்டத்திற்கும் சந்தையில் தற்போது கிடைக்கின்ற ஏனைய பல வெகுமதித் திட்டங்களுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என்னவென்றால், கணக்கில் சேமிக்க வேண்டுமென தேவைப்படுத்தப்படும் நிலுவையின் குறிப்பிட்டதொரு வீதாசாரமாக அதிகமான தொகை வெகுமதியாக வழங்கப்படுகின்றமையாகும். அதன்மூலம், வங்கியியல் துறையில் பணத்திற்கு மிகவும் பெறுமதியை அளிக்கின்ற சேமிப்புசார் வெகுமதி வழங்கல் திட்டமாக இது திகழ்கின்றது.

'12 வருட மரபுரிமையைக் கொண்டதும் நீண்டகாலம் நீடித்துநிற்கும் வெற்றிகரமான வங்கிச் சேவைகளில் ஒன்றாகவும் காணப்படும் 'செலான் சுவர்' வெகுமதி வழங்கல் திட்டமானது, எதிர்வரும் வருடங்களில் மேலும் அதிகமான இலங்கையர்களின் வாழ்வை தொடக்கூடிய விதத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. உறுதிமிக்கதும் நாடளாவிய ரீதியில் பரந்துபட்டதுமான 150 கிளைகளைக் கொண்ட செலான் வங்கியின் கிளை வலையமைப்பானது, நிகழ்நேர தொடர்பிணைப்பை கொண்டியங்குகின்ற அதே வேளை இலங்கை முழுவதிலும் இருக்கின்ற திருப்தியடைந்தவர்களான தனது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மனமகிழ்ச்சி தரக்கூடியதும் பரந்த வகைகளிலானதுமான வங்கி கணக்குகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு தயார் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. பணத்திற்கு உண்மையான பெறுமதியை அளிக்கும் இந்த வெகுமதி வழங்கல் திட்டத்தின் மூலம் மேலும் அதிகமான எமது வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் அனுகூலங்களை பெற்றுக் கொள்வார்கள் என்று நாம் நம்புகின்றோம்' என்று விஜயசேகர உறுதியாக தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X