2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இறங்கு துறைகளை மேம்படுத்தத்திட்டம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வடபகுதியில் கடல்மார்க்க போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் நாடுமுழுவதையும் சேர்ந்த இறங்குதுறைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த புனருத்தாரண செயற்பாடுகளுக்கு கடற்படையின் உதவிகளும் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் இறங்குதுறைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பயணிகள் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் பியர்கள் மற்றும் நழுவிச்செல்லும் பகுதிகள் போன்றன நிர்மாணிக்கப்படவுள்ளன. குடாநாட்டுக்கும் ஏழு தீவுகளுக்குமிடையிலான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் இறங்குதுறைகள் மெருகேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 11 தீவுகள் காணப்படுகின்றன. இதில் ஏழு தீவுகள் மக்கள் அதிகளவு சென்று வரும் பகுதிகளாக அமைந்துள்ளன. குறிக்கட்டுவான், நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு மற்றும் காரைநகர் போன்றன அவையாகும்.

கடற்படையின் ஆளணி மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்த இறங்குதுறைகளை மேம்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் எழுவைதீவு மற்றும் அனலைதீவு இறங்குதுறைகள் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X