Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 21 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மக்கள் அபிமானம் வென்ற மென்பான வர்த்தக நாமம்” எனும் கௌரவத்தை தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா தனதாக்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகள் 2017இல் இந்த கௌரவத்தை தனதாக்கியிருந்தது. இதன் மூலமாக மென்பானங்கள் பிரிவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா முன்னிலையில் திகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா, ஆண்டின் மிகச்சிறந்த இளைஞர்களின் தெரிவுக்கான மென்பான வர்த்தக நாமமாகவும் தெரிவாகியிருந்தது. எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா பேணி வரும் பரந்தளவு இளமையான தோற்றம் மற்றும் புகழ், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற ஏதுவாக அமைந்துள்ளன.
SLIM-Nielsen மக்கள் விருதுகள் என்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, ஏனெனில், மக்களே இதன் பிரதான மத்தியஸ்தர்களாக திகழ்கின்றனர். இவர்களால் தமக்கு பிடித்த வர்த்தக நாமங்கள், நபர்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றன தரப்படுத்தப்படுத்தப்படுகின்றன. வெற்றியாளர்கள் தெரிவு என்பது, நாடு தளுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 15 – 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியிலான நேருக்கு நேர் கருத்துக்கணிப்பினூடாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்பு ஐந்து மாத காலப்பகுதிக்கு வினாக்கோவையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .