Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் முக்கிய வெளிநாட்டு ஏற்றுமதி வருமானமீட்டும் துறைகளில் ஒன்றானதேயிலைத் துறையைத் தொடர்ந்து தக்கவைத்து, இலாபகரமானதாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின், இந்தத்துறையில் உடனடியாக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாக, தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற தேயிலைத்துறையின் தற்போதைய நிலை மற்றும் தேயிலை ஏற்றுமதிச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு பற்றிய அறிவித்தல்களை முன்வைக்கும் மாநாட்டில் இந்தக் கருத்தை தேயிலை ஏற்றுமதிச் சங்கம் அறிவித்திருந்தது.
சர்வதேச மட்டத்தில், தேயிலைத்துறை என்பது, கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, 47 சதவீத வளர்ச்சிப் பதிவாகியுள்ளது. இலங்கை 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் காணப்படும் நிலையில், இந்த வளர்ச்சியை இலங்கைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் முக்கிய பங்கை வகிக்கும் நாடுகளாகும். குறிப்பாக 75 சதவீதமான ஏற்றுமதிகள் இந்த நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளில் காணப்படும் அரசியல் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, வியாபார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் கொள்முதல் செய்யும் திறனையும் பாதித்துள்ளது. இவை இலங்கையின் தேயிலைத்துறையின் வளர்ச்சியில் தடங்கலை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சவால்கள் நிறைந்த சூழ்நிலையில், தேயிலைத்துறைக்கான வாய்ப்பு உறுதியானதாகவும் மேன்மை வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. எனவே, இலங்கையில் தேயிலை இறக்குமதி தடையைத் தளர்த்தி, அதனூடாக இலங்கைத்தேயிலைக்கு, பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிகோலுமாறும், ஏற்றுமதி அளவை அதிகரிப்பதற்கு, வழியேற்படுத்திக் கொடுக்குமாறும், தேயிலை ஏற்றுமதியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணை தொடர்பில், வெளிச்செல்லும் தேயிலை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “வளர்ச்சியை பொறுத்தமட்டில், எந்தவொரு துறையினாலும் பெற்றுக்கொள்ளக்கூடிய அதியுயர் வளர்ச்சி என்பது, அதன் எல்லைகளைப் பொறுத்து அமைந்துள்ளது. தேயிலையைப்பொறுத்தமட்டில், ஒரு சில மட்டுப்படுத்தும் காரணிகள் காணப்படுகின்றன. குறைந்து செல்லும் அளவு மற்றும் தேயிலையின் தரம் போன்றவற்றுடன் தரம் குறைந்த தேயிலைக்கு, அதிகப்படியான விலை போன்றவற்றுடன் தேயிலை இறக்குமதிக்கு, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை போன்றன அந்தக்காரணிகளில் சிலவாகும். தேயிலை ஏற்றுமதித்துறை வளர்ச்சியைப் பதிவு செய்யவும், சர்வதேச சந்தையில் குறிப்பிடத்தக்களவு சந்தைப்பங்கைப் பெற்றுக்கொள்ள இந்தத் தடைகள் நீக்கப்பட வேண்டியுள்ளது”என்றார்.
ஏனைய தேயிலை ஏற்றுமதி நாடுகளில் தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சிகள் பதிவாகியுள்ளதுடன், இலத்திரனியல் முறையிலான வியாபாரக் கட்டமைப்புகள் பின்பற்றப்படுகின்றன. இலங்கையில் தற்போதும் பாரம்பரிய தேயிலை ஏல விற்பனை முறை கைக்கொள்ளப்படுகின்றது. அடுத்த ஆண்டில் இலங்கைத் தேயிலை ஏற்றுமதியில் 150 வருட பூர்த்தியைக் கொண்டாடவுள்ள நிலையில், தேயிலை விற்பனைச் செயற்பாட்டை தன்னியக்கப்படுத்துமாறு, தேயிலை ஏற்றுமதி சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது. இது,கொள்முதல் செய்யும் நேரத்தைக் குறைப்பதுடன், ஏல விற்பனையின் போது ஏற்படக்கூடிய தவறுதலான செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.
2020ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துக் கொள்வது எனும் சவால் நிறைந்த இலக்கு காணப்படும் நிலையில், தேயிலைச்சபை மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பை தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் எதிர்பார்த்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .