.jpg)
இலங்கையின் இளைஞர்களின் ஆளுமை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், ஆளுமை வாய்ந்த ஊழியர் சமூகமொன்றை கட்டியெழுப்பும் வகையில் 101.5 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் அதிகளவு கல்வியறிவை படைத்தவர்களாக இலங்கையர்களின் ஊழியர் சமூகம் அமைந்துள்ளது. நாட்டின் 96 வீதமானவர்கள் அடிப்படை பாடசாலை கல்வியை பூர்த்தி செய்துள்ளதுடன், 87 வீதமானவர்கள் இரண்டாம் நிலை கல்வியை பூர்த்தி செய்துள்ளனர். இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்பற்றோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், 15 – 24 வயதுக்குட்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2012 இல் 20 வீதமாக பதிவாகியிருந்தது.
சிறந்த தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் குடும்பத்தின் வறுமை நிலையை குறைக்க முடியும் என்பது உலக வங்கியின் எதிர்பார்ப்பு, இதற்கமைவாக இந்த ஆளுமை அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.