Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
J.A. George / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘Battle of the Blues’, ‘Play for a Cause’, வருடாந்திர கிரிக்கெட் போட்டி, கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமஸ் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி மூலம் கிரிக்கெட் உபகரணங்கள் இல்லாத தகுதியான நான்கு பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணஙகள் பரிசளிக்கப்படவுள்ளது.
கொழும்பு ராயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ. அபேரத்னா மற்றும் கல்கிஸ்சை புதிய தோமஸ் கல்லூரியின் அதிபர் வணக்கத்திற்குரிய மார்க் பில்லிமேரிய ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிதலே, NCP/POL/HI/ கிரிதலேகம மகா விதிதயாலயம், திருகோணமலை T/TN/ ஸ்ரீ ரதநஜோதி வித்யாதானா பிரிவேனா, மெனிக்டிவேலா மாப/ தேனு/ மெனிக்டிவேலா மத்திய கல்லூரி மற்றும் நீர்கொழும்பு ஹரிச்சந்திர கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ராயல் - தோமியனின் 136 வது பதிப்பில், இலங்கையின் Blue-Ribbon Big Match, The Battle of the Blues உடன் நீண்ட மற்றும் வெற்றிகரமான அனுசரணையினை மீண்டும் உருவாக்கி ஒவ்வொரு ஓட்டத்திற்கும் 1,000 ரூபாவையும் வீழ்ந்தப்படும் விக்கெட்டுக்கு 10,000 ரூபாவையும் வழங்குகின்றது.
இந்த ஆண்டின் 'Play for a Cause' உறுதிமொழிக்கு அமைய 1,008,000 ரூபாவை பங்களித்தது. 141 tJ Battle of the Blues உள்ளடக்கிய ‘Play for a Cause’ உறுதிமொழி தொடங்கப்பட்டதிலிருந்து, தகுதியான 22 பாடசாலைகளுக்கு 6,151,000 ரூபாய் மதிப்பிளான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
‘Battle of the Blues’ என்பது இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியாகும். மேலும் 141 ஆண்டுகளில் நீடித்த மற்றும் வண்ணமயமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
அடிலெய்டில் உள்ள புனித பீட்டஸ் கல்லூரி மற்றும் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள பிரின்ஸ் ஆல்பிரட் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்ற வருடாந்திர போட்டியின் அடுத்தபடியாக, உலகளாவிய ரீதியில் விளையாடப்படுகின்ற இரண்டாவது மிக நீண்ட தடையில்லா கிரிக்கெட் தொடர் என்ற கௌரவத்தை இது பெற்றுள்ளது.
ராயல்-தோமியன் போட்டிக் குழு உறுப்பினர்கள் - இடமிருந்து வலமாக நிற்பவர்கள் சுல்கி ஹமீத், அனுர பிரசாந்த, ரோஷன் ஆடம்ஸ், குமுது வர்ணகுலசூரியா அருண சாந்த இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பவர்கள்:
மகேஷ் நானாயக்கார (துணைத் தலைவர்), அசங்க பெரேரா (துணை அதிபர் - புனித. தாமஸ் கல்லூரி), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிஇ நிறுவனத்தின் எண்டர்பிரைஸ் வியாபாரம் மற்றும் பெரிய நிறுவன விற்பனை பிரிவு துணைத் தலைவர்இ நவீன் பிரீஸ், எம். எம். ரியாஸ் (உப அதிபர் - ராயல் கல்லூரி), பிரசன்ன பெர்னாண்டோ (துணைத் தலைவர்) ராயல் கல்லூரி அணித்தலைவர் - தெவிந்து சேனாரத்னே மற்றும் புனித . தாமஸ் கல்லூரி துணை கேப்டன் - மனிஷ ரூபசிங்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago