2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஜனசக்திக்கு விருது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை பட்டயக்கணக்காளர் கல்வியகத்தினால் (CA Srilanka) ஏற்பாடு செய்யப்பட்ட 48ஆவது வருடாந்த ஆண்டறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் காப்புறுதி பிரிவில், சிறந்த  வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை மற்றும் சிறந்த ஆட்சி முறைமையை அடையாளப்படுத்தும் நோக்கில் ஜனசக்தி நிறுவனத்திற்கு வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 2012 CA வருடாந்த ஆண்டறிக்கை விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த வருடாந்த அறிக்கை பேணல், வருடாந்த தகவல் அறிக்கை ஊடாக பங்குதாரர்களுடனான வெற்றிகரமான தொடர்பாடல், சிறந்த நிதிசார் மற்றும் நிதிசாரா தகவல்கள், சட்ட தேவைகளுக்கு இணங்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

'இந் நிறுவனத்தின் நிதியாண்டுக்கான வருடாந்த ஆண்டறிக்கையில் பங்குதாரர்களுக்கு அவசியமான முக்கியமான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜனசக்தி நிறுவனத்தின் நிதியறிக்கையின் வெளிப்படையான தன்மையை அடையாளப்படுத்தும் நோக்கில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது' என ஜனசக்தி நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில், ஜனசக்தி காப்புறுதியானது ரூ7இ270 மில்லியன் இலாபத்தையும், அதே ஆண்டில் 7சதவீத வளர்ச்சி வீதத்தையும் காட்டியிருந்தது. மேலும் இந்நிறுவனமானது மொத்தமாக 16 சதவீத வளர்ச்சி வீதத்தையும் அடைந்துள்ளது. ஆயுள் சாரா காப்புறுதி பிரிவின் வளர்ச்சி 18 சதவீதமாக பதிவானதுடன், கடந்த பல வருடங்களில் பதிவான உயர் வளர்ச்சி வீதமாக இது அமைந்துள்ளது.

மேலும் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'தற்போதைய பூகோள நிலைமைகளின் பிரகாரம் வெளிப்படையான தன்மை மற்றும் சிறந்த ஆட்சிமுறையின் தேவை அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய தேவைகளுக்கு இணையான ஜனசக்தியின் ஈடுபாடு மற்றும் கடந்த வருடத்திற்கான திட்டங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .