2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஆடவர் ஆடையின் சிறப்புத்துவத்தை இரத்தினபுரிக்கு கொண்டுசெல்லும் ஹமீடியா

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் ஆடவர் ஆடைகள் உற்பத்தித் துறையில் முன்னணியில் திகழும் ஹமீடியா நிறுவனமானது தனது வர்த்தகக் குறியீடு கொண்டுள்ள சிறப்புத்துவம், தனது உற்பத்திகள் மற்றும் சேவைகளை, அண்மையில் இலங்கையின் இரத்தினக்கற்களின் தலைநகரான இரத்தினபுரிக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த பிரத்தியேக ஹமீடியா ஆடவர் ஆடைக் காட்சிறையின் திறப்பு விழாவில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் அவர்களும் பிரசன்னமாகி இருந்தார்.

இலக்கம் 296, பிரதான வீதி, இரத்தினபுரி என்ற முகவரியில் உபாய ரீதியான முறையில் நிறுவப்பட்டுள்ள 4500 சதுர அடி பரப்பளவுள்ள இந்த ஹமீடியா ஆடவர் ஆடைக் காட்சி அறையானது, ஹமீடியா நிறுவனத்தை புகழ்பெறச் செய்துள்ள பிரத்தியேகமான ஆடவர் ஆடைகளுக்காக முழு அளவில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். சம்பிரதாயபூர்வ மற்றும் கசுவல் ஆடைகள், நேர்த்தியான (ஸ்மார்ட்) கசுவல் ஆடைகள், விருந்து நிகழ்வு மற்றும் வைபவங்களுக்கு பொருத்தமானதும் அதேநேரம் புதிய வடிவமைப்புக்கள், வர்ணங்கள் மற்றும் துணிகளில் தயாரிக்கப்பட்டதுமான பரந்துபட்ட வகைகளிலான ஆடைத் தெரிவுகளை இக்காட்சியறை தன்னகத்தே கொண்டிருக்கும்.
 
ஹமீடியா நிறுவனத்தின் இரத்தினபுரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு தனிச் சிறப்புமிக்க சேவையாக தமது 'அளவுக்கேற்றவாறு ஆடைகளை தைத்துக்கொள்ளும்' (Bespoke) வசதி காணப்படுகின்றது. இவ்வசதியின் ஊடாக, உலகத் தரமிக்க துணி வகைகளில் இருந்து தமக்குத் தேவையான ஆடையை அளவு கொடுத்து ஹமீடியாவில் தைத்துக் கொள்ள முடியும்.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் கூறுகையில், 'இரத்தினபுரி ஆனது அதனைச் சூழவுள்ள பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சேவை வழங்குகின்ற ஒரு உபாய ரீதியிலான பொருட்கொள்வனவு மையமாக முன்னேறியுள்ளது. இரத்தினபுரியில் உள்ள நவநாகரிகத்தில் அக்கறை செலுத்தும் வாடிக்கையாளர்கள் - உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான அசல் வர்த்தகக் குறியீட்டைக் கொண்ட ஆடைகள், கடந்த பல வருடங்களாக கிடைக்கப் பெறாவதவர்களாக இருக்கின்றனர். தமது ஆடைசார் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இனிமேலும் கொழும்புக்கு பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை. இந்த வெற்றிடத்தை எம்மால் நிரப்ப முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.  

இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளில் மிக விரைவாக அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தை கொண்டியங்கும் இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை நிபுணத்துவ நிறுவனம் எனும் பொறாமைப்படத்தக்கக அந்தஸ்தை ஹமீடியா நிறுவனம் அனுபவித்து வருகின்றது. இலங்கையில் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், நிறைவேற்று அதிகாரிகள், கூட்டாண்மை நிறுவன உயரதிகாரிகள், மணமகன்கள் போன்ற பல தரப்பினரதும் முதலாவது விருப்பத் தெரிவாக ஹமீடியா திகழ்கின்றது. 'சர்வதேச அளவிலான பிரபல்யத்தைப் பெற்ற, இலங்கையின் மிகவும் விருப்பத்திற்குரியதும் நம்பிக்கையை வென்றதுமான ஆண்கள் ஆடையாக திகழ்தல்' எனும் தனது தூரநோக்கின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்ற ஹமீடியா நிறுவனமானது – நேர்மை மற்றும் நம்பிக்கை என்பவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள தனது அடிப்படை பெறுமதிகளில் தொடர்ந்தும் உறுதியாக செயற்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .