2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

குளியாப்பிட்டியவின் அமானா வங்கியின் புதிய கிளை

A.P.Mathan   / 2013 மார்ச் 11 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இல.215,1/1, பிரதான வீதி, குளியாப்பிட்டியவில் 2013 பெப்ரவரி 20ஆம் திகதி தனது புதிய கிளையை திறந்த நிகழ்வுடன் அமானா வங்கி மேலும் தன்னை விரிவாக்கம் செய்துள்ளது. வங்கியின் 17ஆவது கிளையின் திறப்புவிழா குளியாப்பிட்டிய மேயர் கௌரவ லக்ஸ்மன் அதிகாரி, அமானா வங்கியின் பிரதம நிர்வாகி / முகாமைப் பணிப்பாளர் திரு. பைசால் சாலி, பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு.மொஹமட் அஸ்மீர் ஆகியோரின் முன்னிலையில் நிறைவுபெற்றது.

விழாவில் உரையாற்றிய அமானா வங்கி பிரதம நிர்வாகி திரு. பைசால் சாலி,'விவசாயத்தின் மையப்பகுதியும், இயற்கை வளங்கள் நிரம்பியதுமாகிய குளியாப்பிட்டிய' துரித வளர்ச்சி கண்டுவரும் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி காணக்கூடியதாக உள்ளது. இங்கு தமது தொழில் முயற்சிகளில் திறமையாக செயற்பட்டவர்கள் துரித முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். குளியாப்பட்டியவில் எமது பிரதான கவனத்திற்குரிய விடயமாக இருப்பது சமத்துவம், நியாயநிலைப்பாடு, நீதி என்பவற்றின் அடிப்படையில் நிதிசார் உற்பத்திகள், தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தொழில் முயற்சியாளர்களின் அபிவிருத்தியை தூண்டுவதாகும்.

கௌரவ லக்ஸ்மன் அதிகாரி தனது உரையில் 'பிறநாட்டு முதலீடுகளை நாட்டினுள் தருவிப்பதற்கு அமானா வங்கி பெரிதும் காரணமாயுள்ளது. அமானா வங்கி குளியாப்பிட்டியயில் செயற்பட ஆரம்பித்துள்ளதால் இப்பகுதி மக்களும், வர்த்தக நிறுவனங்களும் பெரும் அனுகூலங்களை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.

அமானா வங்கியின் ஊடாகஇப்பகுதி மக்கள் நடைமுறை கணக்குகள், சேமிப்பு கணக்குகள், வெளிநாட்டு நாணயக்கணக்குகள், சிறுவர் சேமிப்பு கணக்குகள், தவணை முறை முதலீட்டு கணக்குகள், வீடமைப்பு நிதி, குத்தகை, சிறிய நடுத்தர நிறுவனக்கணக்குகள், கூட்டிணைப்புகம்பனிக் கணக்குகள், வர்த்தக சேவைகள், திறைசேரி சேவைகள் போன்ற பெருமளவு வங்கி சேவைகளை அனுபவிக்க முடியும். 24 மணி ATM சேவையும் இங்கு நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் வங்கியை விரிவாக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல வசதிகள், புதிய வங்கி சேவைகளை என்பன வழங்கவுள்ளது.

இஸ்லாமிய வங்கியியல் கோட்பாடுகளை முற்றிலும் அனுசரித்து செயற்படும் முதலாவது உரிமம் பெற்ற இலங்கையின் வர்த்தக வங்கி இதுவாகும். செயற்திறன் மிக்க பங்கீட்டாளர்கள், பாங்க் இஸ்லாம் மலேசியா பர்ஸாட், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்காளதேஷ் ஏ.பீ.வங்கி ஆகியவற்றின் பங்குதாளராக திகழும் அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறையில் ஒரு சாதனை மிக்க பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. ஷரியா முறை வங்கியியலில் ஏற்கனவே சந்தையின் முன்னோடியாக திகழும் அமானா வங்கி இந்த எண்ணக்கருவை நாட்டின் அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .