2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் இரண்டாவது விமான எரிபொருள் நிரப்பு நிலையம் தயார்

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டாவது விமான எரிபொருள் நிரப்பு நிலையத்தை தாம் தயார்படுத்தியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல பகுதியில் இந்த விமான எரிபொருள் நிரப்பு நிலையம் தாபிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சுமார் 250,000 லீற்றர் எரிபொருளை சேகரித்து வைக்கக்கூடிய வகையில் இந்த நிரப்பு நிலையம் அமைந்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவில் எரிபொருள் நிரப்பல் மேற்கொள்ளப்படுமா என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .