2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டு போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதற்தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரியானது தொடர்ந்து 7ஆவது வருடமாக சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான தடகள சம்பியன் போட்டிகளுக்கு (ISAC) அனுசரணை வழங்கியுள்ளது. அண்மையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியானது 22 சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த 3500 தடகள வீரர்களை கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவின் கீழ் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வின்; பிரதம விருந்தினராக கேட்வே (Gateway) சர்வதேச பாடசாலையின் தலைவரும், ISAC இன் ஸ்தாபகருமான ஆர்.ஐ.டி.அல்ஜ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இவ் அனுசரணை குறித்து சிபிஎல் இன்டர்நெஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உதவி சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'சொக்லட் துறையில் சந்தையில் முன்னோடியாக திகழும் ரிட்ஸ்பரி வர்த்தக நாமமானது சர்வதேச பாடசாலை தடகள விளையாட்டு சம்பியன் போட்டிகளுடன் கைகோர்த்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். சிறுவர்களுக்கு தங்கள் திறமைகளை மேம்படுத்தி விளையாட்டுத் துறையில் முன்னோடியாக வளம் வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதே இவ் அனுசரணையின் குறிக்கோளாகும். ISAC ஆனது இலங்கையிலுள்ள தடகள வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை இலங்கையின் விளையாட்டு தூதரர்களாக உருவாக்குவது தொடர்பில் முக்கிய பங்களிப்பினை வழங்கிவருகிறது' என்றார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் ஒட்டுமொத்த வெற்றியாளராக வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை தெரிவு செய்யப்பட்டதுடன், இரண்டாம் இடத்தை கொழும்பு கேட்வே பாடசாலை வென்றெடுத்தது. பெண்கள் பிரிவில் சிறந்த ஒட்டுமொத்த ரிட்ஸ்பரி சம்பியன் கிண்ணத்தை கேட்வே சர்வதேச பாடசாலையைச்; சேர்ந்த ஷனிகா தெவ்மினியும், ஆண்கள் பிரிவில் சிறந்த ஒட்டுமொத்த ரிட்ஸ்பரி சம்பியன் கிண்ணத்தை அதே பாடசாலையைச் சேர்ந்த உதந்த பண்டார ஆகியோர் வென்றெடுத்தனர்.

ரிட்ஸ்பரி வர்த்தகநாமமானது தொடர்ந்து இலங்கையின் விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருவதுடன் கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன் தொடர், உள்ளக சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகள் மற்றும் சேர் ஜோன் டார்பட் உள்ளக பாடசாலை தடகள போட்டிகள் போன்றவற்றிற்கும் அனுசரணையை வழங்குகிறது.

சிபிஎல் நிறுவனத்தின் முதற்தர இனிப்பு தயாரிப்பான ரிட்ஸ்பரி வர்த்தக நாமமானது இலங்கை மக்களிடையே வீட்டுப்பாவனை பொருளாக மாற்றமடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற SLIM வர்த்தகநாம விருது வழங்கும் விழாவில் 'ஆண்டுக்கான சிறந்த வர்த்தக நாமம்' விருதினை ரிட்ஸ்பரி வென்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டின் வர்த்தகநாம தயாரிப்புக்கான தங்க விருது, ஆண்டிற்கான உள்நாட்டு வர்த்தகநாம விருது, ரிட்ஸ்பரி ட்ரொபிகா (Tropica) தயாரிப்புக்கான ஆண்டின் சிறந்த புதிய அறிமுகத்திற்கான விருது போன்றவற்றையும் ரிட்ஸ்பரி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .