2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நாணயக்குற்றி தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்காக புதிய ஒப்பந்தம்

A.P.Mathan   / 2013 மார்ச் 13 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நாணயக்குற்றி தயாரிப்பு மற்றும் விநியோகிப்பதற்கான புதிய ஒப்பந்தமொன்றில் ஃபின்லாந்தின், ரோயல் டச் மின்ட், மின்ட் ஒஃப் ஃபின்லாண்ட் நிறுவனத்துடனும், ஸ்லோவாக்கியாவின் மின்கொவ்னா கிரெம்னிகா நிறுவனத்துடனும் இலங்கை மத்திய வங்கி ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2013 – 2015 வரையிலான காலப்பகுதியில் தற்போது அமுலிலுள்ள 1ரூபா, 2ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயங்களுக்கு நிகரான புதிய நாணயங்களை தயாரித்து மக்கள் பாவனைக்காக வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போது மக்கள் பாவனையில் இல்லாமல் வெவ்வேறு பகுதிகளில் முடங்கி கிடக்கும் நாணயக்குற்றிகளை அந்த பகுதிகளிலிருந்து மீட்டு, மீண்டும் மக்கள் பாவனைக்காக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய வங்கி மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .