2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மெஜிகட் வெட்டும் உபகரண இலங்கையின் ஏக விநியோகஸ்தராக டெல்மேஜ் ஃபோர்சைத்

A.P.Mathan   / 2013 மார்ச் 13 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


டிரைடென்ட் டூல்ஸ் லிமிட்டட் இந்தியா, அதன் ஒட்டுமொத்த மெஜிகட் வெட்டும் உபகரணங்களுக்கான ஏக விநியோகஸ்தராக டெல்மேஜ் ஃபோர்சைத் அன்ட் கம்பனி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன் சிறந்த தரம் மற்றும் நியாயமான விலைக்கு மிகவும் அறியப்பட்ட மெஜிகட் குறியீடானது, ஹெக்சோ பிளேடுகள், ஹெக்சோ ஃபிரேம்கள், பவர்சோ பிளேடுகள், பேன்ட்சோ பிளேடுகள், அதிவேக உலோக பிட்டுகள், வெட்டும் பிளேடுகள், துளையிடும் பிட்டுகள் மற்றும் துளையிடும் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

1982இல் ஸ்தாபிக்கப்பட்ட மெஜிகட் உற்பத்திகள் தற்போது ஆறு கண்டங்களிலும் ஜேர்மனி, லத்தீன் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உட்பட 45இற்கும் அதிகமான நாடுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றது. அது சந்தைப்படுத்தப்படும் நாடுகளில் வெட்டும் உபகரண சந்தையில் முன்னணியில் மெஜிகட் குறியீடு உள்ளது.

நாடுமுழுவதுமுள்ள விநியோக பலத்தைக் கொண்டு, இலங்கை முழுவதும் சகல ஹார்ட்வெயார் கடைகளிலும் மெஜிகட் உற்பத்திகளை கிடைக்கச் செய்ய டெல்மேஜ் எதிர்பார்க்கிறது. மெஜிகட் உற்பத்திகள் சிறந்த செயற்பாட்டை வழங்குவதுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுமதியை வழங்கும் என டிரைடன்ட் டூல்ஸ் இந்தியா உறுதி வழங்குகின்றது.

மெஜிகட் உற்பத்திகள் சர்வதேச தரங்களுக்கு அமைய பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001:2008 தர முகாமைத்துவ முறைமைக்கு அமைவாக உள்ளது. பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபை, இந்திய ஏற்றிமதி அமைப்புகளின் சம்மேளனம், இந்தோ ஜேர்மன் வர்த்தக சம்மேளனம் – ஜேர்மனி, தர நிர்ணய ISM குறியீடுகளுக்கான கென்ய பணியகம் ஆகியவற்றினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .