2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இரண்டு முச்சக்கர வண்டிகளை வெகுமதியாக வழங்கிய ஜனசக்தி

A.P.Mathan   / 2013 மார்ச் 14 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் நாடுபூராகவும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஸ்டிக்கர் விளம்பர ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் இரண்டு முச்சக்கர வண்டிகளை பெறும் அதிஷ்டசாலிகள் அண்மையில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டனர். எம்.ஆர்.திலகரத்ன மற்றும் கே.டபிள்யு.ஜயசிங்க ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இவ் ஊக்குவிப்பு திட்டமானது முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை மேம்படுத்தும் நோக்கிலும், தற்போதைய தனிநபர் விபத்து காப்பீட்டிற்கு மதிப்பு சேர்க்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது வேறொருவரிற்கு சொந்தமான முச்சக்கர வண்டியை ஓட்டுபவரும், வெற்றியாளருமான கே.டபிள்யு.ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், 'சொந்தமாக முச்சக்கர வண்டி வாங்குவதற்கும், சுயாதீனமாக வருவாயை அதிகரித்துக் கொள்வதற்குமான கனவு என்னிடம் நீண்;டநாளாக இருந்தது. எனது கனவினை நனவாக்கிய ஜனசக்தி நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

ஜனசக்தி நிறுவனத்தின் தனிநபர் விபத்து காப்பீடு திட்டத்தின் அனுகூலங்களை பெறுவதற்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் வண்டியின் பின்புறத்தில் ஜனசக்தி வர்த்தகநாம ஸ்டிக்கர்களை ஒட்டியிருத்தல் அவசியமானதாகும். மூன்றாம் தரப்பினரின் ஃபுல் ஒப்ஷன் ஒப்பந்தத்தை கொண்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர் விபத்தின் போது மரணிக்க நேருமானால் அவரின் குடும்பத்திற்கு ரூ.100,000 நஷ்ட ஈடாக வழங்கப்படும். மேலும் ஃபுல் ஒப்ஷன் ஒப்பந்தம் இல்லாத முச்சக்கர வண்டி ஓட்டுனர் விபத்தின் போது மரணிக்க நேருமானால் அவரின் குடும்பத்திற்கு ரூ.50இ000 வழங்கப்படும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா, 'ஜனசக்தி நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளின் செயற்பாட்டில் புதுமை, ஆற்றல் மற்றும் சமூக பொறுப்புகள் போன்றன முக்கிய பண்புகளாக காணப்படுகின்றன. ஜனசக்தி காப்புறுதியானது கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தொழிற்துறைகளை அறிமுகப்படுத்தி உள்நாட்டு காப்புறுதி சந்தையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. இது நாங்கள் வழங்கும் மற்றொரு உற்பத்தியாகும்' என்றார்.

மேலும் அவர், 'தற்போது 500,000 க்கும் அதிகமானோர் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களாக உள்ளதுடன், துரதிஷ்டவசமாக அதிகப்படியான முச்சக்கர வண்டி விபத்துகள் நிகழ்கின்றன. இதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மற்றும் மனஅமைதியின் குறியீடாக ஜனசக்தி ஸ்டிக்கர்களை உருவாக்கியுள்ளோம். இத் திட்டமானது முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எமது உதவி மற்றும் பாதுகாப்பில் தங்கியிருக்க உதவுகிறது. இது ஜனசக்தி நிறுவனத்தின் இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தொடர்பிலான அர்ப்பணிப்பு மற்றும் கடமையாக அமைந்துள்ளது' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .