2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தனது புதிய அபிவிருத்தி ஆய்வுகூடத்தை அட்லஸ் ஸ்தாபிப்பு

A.P.Mathan   / 2013 மார்ச் 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பில் பரிசோதனை மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்கான உடன்படிக்கையில்  மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாட்டின் முன்னணி எழுது பொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் (அட்லஸ்) கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் எழுது பொருட்கள் உற்பத்தி துறையில் இலங்கையில் நிறுவப்படும் முதலாவது பரிசோதனை மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடமாக இது அமையவுள்ளது. அட்லஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் இந்த ஆய்வுகூடம் நிறுவப்படவுள்ளதுடன், புதிய கண்டுபிடிப்புகள், தற்போதுள்ள பொருட்களின் தரங்களை அபிவிருத்தி செய்தல், உற்பத்தி சுழற்சிமுறையில் உற்பத்தி செலவை குறைத்து, தரத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்த தொழில்சார் ஆய்வு, புதிய கண்டுபிடிப்பின் மூலம் அமைந்த உற்பத்தி செயன்முறைகளின் அபிவிருத்தி, அலுவலக காகிதாதிகள் தேவைகளை இனங்காணல், வலுச்சிக்கனம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் அமைந்த பொருட்களுக்கு சந்தைப்பெறுமதியை சேர்த்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், சிலோன் பென்சில்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான அதிகாரி விராஜ் ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் இந்த துறையில் புதிய அறிமுகங்களை உட்புகுத்தி, மாற்றங்களை ஏற்படுத்திய நிறுவனமாக அட்லஸ் திகழ்கிறது. எழுது பொருட்கள் உற்பத்தி துறையில் எழும் ஒவ்வொரு விதமான தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அமைந்த உற்பத்தி வசதிகளை கொண்ட ஒரே கம்பனி என்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் கையாழும் உயர் உற்பத்தி திறன்களுக்கு அமைவாக, பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல், தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக 1999 ஆம் ஆண்டு நாம் எமது போல்பொயின்ட் பேனாவை 'மில்லேனியம்' எனும் நாமத்தில் 10 ரூபாவுக்கு அறிமுகம் செய்திருந்தோம். இதே போன்று 'அட்லஸ் Chuti T' பேனாவையும். 10ரூபாவுக்கு நாம் 2003 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்திருந்தோம், நாம் எமது சொந்த உற்பத்தி பிரிவை கொண்டிருப்பதன் மூலம், எமது சொந்தமான பரிசோதனை மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடமொன்றை நிறுவும் எண்ணத்தை கொண்டிருந்தோம். இதற்காக உலக அங்கீகாரம் பெற்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க நாம் தீர்மானித்தோம்' என்றார்.

அபிவிருத்தி மற்றும் ஆய்வுகூட நடவடிக்கைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் அஜந்த பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'தற்போது நாம் எமது தயாரிப்புகளை உயர் சர்வதேச தரங்களுக்கு அமைவாக தயாரித்து வருகிறோம். இந்த மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள புதிய ஆய்வுகூடத்தின் மூலம் உலகின் உயர்தரங்களை எம்மால் ஈடுசெய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம். எதிர்கால சந்தைக்கு தேவையான போக்குகள் மற்றும் புதிய முறைகளை இந்த உடன்படிக்கையின் மூலம் இனங்காண முடியுமென நாம் எதிர்பார்க்கிறோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இன்றைய போக்குக்கு அமைய எமது திட்டம், எதிர்காலத்துக்கான தயாரிப்புகளை முறையாக திட்டமிடுவதாக அமைந்துள்ளது. மேலும், எமது அபிவிருத்தி மற்றும் ஆய்வுகூட கண்டறியப்பட்ட விபரங்களை பல்கலைக்கழகத்தை சேர்ந்த அங்கத்தவர்களுடன் பரிமாறிக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம், இதன் மூலம் எமது தயாரிப்புகளின் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்' என்றார்.

மொரட்டுவ பல்கலைக்கழகம் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக அமைந்துள்ளது. மூன்று பிரிவுகளான பொறியியல், கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை இந்த பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. தற்போது 11 பட்டக்கீழ்படிப்பு கற்கைகளையும், 56 பட்டமேற்படிப்பு கற்கைகளையும் இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நாட்டின் பல நிறுவனங்களுக்கு வர்த்தக நிறுவனங்களுக்கு பரிசோதனை மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

வருடாவருடம் தனது புதிய தயாரிப்புகளை சந்தையில் அட்லஸ் அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் பொருட்கள் அபிவிருத்தி செயற்பாடுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. இந்த உடன்படிக்கையின் மூலம் அட்லஸ் நிறுவனத்துக்கு தான் மேற்கொள்ளும் சகல விதமான பொருட்கள் சம்பந்தமான ஆய்வு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் இலங்கையில் மேற்கொள்ள முடிவதுடன், வெளிநாட்டு ஆய்வு நிலையங்களில் தங்கியிருக்க வேண்டிய தேவையை குறைத்துள்ளது. அட்லஸ் நிறுவனத்தை பொறுத்தமட்டில் 500க்கும் அதிகமான தயாரிப்புகள் உள்ளடங்கியுள்ளன. இதில் 80 வீதமானவை இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்டு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகைக்கு சிறந்த பெறுமதி சேர்க்கப்படுகிறது.

1959ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிலோன் பென்சில் கம்பனி, பாடசாலை மற்றும் அலுவலக எழுது பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளில் முன்னணியில் திகழும் நிறுவனமாகும். இலங்கையில் டிஸ்னி, மார்வெல் மற்றும் பென்10 கார்டூன் உருவங்களை தமது தயாரிப்புகளில் உபயோகிப்பதற்கான அங்கீகாரத்தை பெற்ற ஒரே எழுது பொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனம் அட்லஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .