2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அமில் இன்டஸ்ரிஸ் மூலம் கடவுசொல் பாதுகாப்புடனான டிசைனர் ரோலர் கவுகள் அறிமுகம்

A.P.Mathan   / 2013 மார்ச் 18 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னர் ரோலர் கதவுகள் தயாரிக்கும் நிறுவனமான அமில் இன்டஸ்ரிஸ் மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமைந்த கடவுச்சொல் (Password) பாதுகாப்புடனான ரோலர் கதவுகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 'டிசைனர் ரோலர் டோர்ஸ்' எனும் வர்த்தக நாமத்தில் இந்த புதிய வகை கதவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகை கதவுகளை இந்த கடவுச்சொல்லை தெரிந்திருப்பவர்கள் மட்டும் செயற்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த ரோலர் கதவுகள் வெளிநாடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட போதிலும், இலங்கையை பொறுத்த மட்டில் இது புதிய நுட்பம் 'டிசைனர் ரோலர் டோர்ஸ்| களில் மட்டுமே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கதவுகளில் உள்ள விசேட அம்சம் யாதெனில், அதிகாரம் அற்ற நபரொருவர் கடவுச்சொல்லை தொடர்ந்து 3 தடவைகள் தவறாக வழங்கும்பட்சத்தில. ரோலர் கதவுகளில் காணப்படும் எச்சரிக்கை சமிக்ஞை ஒலிக்க ஆரம்பிக்கும். இந்த விசேட அம்சத்தின் காரணமாக, இந்த ரோலர் கதவுகள் மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் வீட்டு உரிமையாளர்களுக்கு அமைந்திருக்கும். மேலும், டிஜிட்டல் முறையில் அமைந்த லொக் மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு போன்றவற்றுடன், இரவு வேளைகளில் பயன்படுத்தவென ஒளிக்கட்டமைப்பையும் கொண்டுள்ளது.

'டிசைனர் ரோலர் கதவுகள்' நவீன உபகரணங்களின் மூலம் அவுஸ்திரேலிய தொழில்நுட்பத்துக்கமைவாக தயாரிக்கப்படுகின்றது. துருப்பிடிக்காத ஸ்ரில் கொண்டமைக்கப்பட்டுள்ளதால், நீர் தேங்கிநிற்காததுடன், கதவு பழுதடையாமல் நீண்ட ஆயுளை கொண்டதாக அமைந்துள்ளது.

அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிஹான் அபேசுந்தர கருத்து தெரிவிக்கையில், 'டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமைந்துள்ள ரோலர் கதவுகளை மிகவும் குறுகிய காலப்பகுதியில் நாம் இலங்கையர்களுக்காக அறிமுகம் செய்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை நாம் பெற பிரதான காரணமாக, எமது தயாரிப்புகளின் உயர் தரம் அமைந்துள்ளது. அத்துடன், எமது அர்ப்பணிப்பான ஊழியர் குழுவினரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க தம்மை அர்ப்பணித்துள்ளனர். தற்போது நாம் அறிமுகம் செய்துள்ள இந்த ரோலர் டோர், இலங்கையில் இந்த ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதலாவது ரோலர் டோர் ஆகும். பாவனையாளருக்கு உயர் பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த ரோலர் டோர் அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு பகுதிகள் உள்ளடங்கலாக, நாட்டின் எந்தப் பகுதிக்கும் நாம் விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்கி வருகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் நாம் விசேடமான தொலைபேசி இலக்கமொன்றையும் வழங்கியுள்ளோம். எந்நேரத்திலும், வாடிக்கையாளர்கள் 0773 564000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தமக்கு அவசியமான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

2010, 2011 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கதெல்ல கண்காட்சியில் சிறந்த தயாரிப்புக்கான விருதை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் டிசைனர் ரோலர் டோர்ஸ் பெற்றிருந்தன. அமில் இன்டஸ்ரிஸ் நிறுவனம் 1985 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டிருந்தது. நிர்மாணம் மற்றும் பொறியியல் துறை சார்ந்த நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வருவதுடன், 2010 ஆம் ஆண்டு ICTAD அமைப்பிடமிருந்து C3 தரச்சான்றையும் பெற்றிருந்தது. மேலும், இந்நிறுவனத்துக்கு தர முகாமைத்துவ கட்டமைப்புக்கான ISO 9001:2008 சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .