2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஜப்பானிய கட்டமைப்பு

A.P.Mathan   / 2013 மார்ச் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு உயர் தொழில்நுட்பம் வாய்ந்த கட்டமைப்பு ஒன்றை அன்பளிப்பு செய்ய ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பு (JICA) முன்வந்துள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் மூலம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல், வானிலை, வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்குரிய காரணிகளை இனங்காணல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக  ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பு (JICA) மூலம் 1.2 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த கட்டமைப்புக்கு அமைவாக இந்த பாதையில் பயணிக்கும் வாகனங்களுக்கு இலத்திரனியல் பலகைகள் மூலம் அறிவித்தல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த உபகரணத்தொகுதியின் மூலம் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்தை கண்காணிப்பு செய்யும் அமைப்புக்கு அவசியமான போக்குவரத்து நெரிசல் தொடர்பான விபரங்களை திரட்டக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .