2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனசக்தி மோட்டர் கிளினிக்

A.P.Mathan   / 2013 மார்ச் 20 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் மூலம் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்த வாகன உரிமையாளர்களுக்கு அனுகூலம் வழங்கும் வகையில், இலவச மோட்டர் கிளினிக் நிகழ்வு கடந்த வெள்ளி (15) மற்றும் சனி (16) ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபை பழைய வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அனைத்து வாகனங்களினதும் கோளாறுகள் இலவசமாக பரிசோதனைகளின் மூலம் இனங்காணப்பட்டு, அவற்றின் நிலைமைகள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்காக ஜனசக்தி நிறுவனம் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரை ஈடுபடுத்தியிருந்ததுடன், அவர்களின் ஆலோசனைகளை நேரடியாக வாகன உரிமையாளர்களுக்கு சென்றடையக்கூடிய வசதிகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறித்து ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் கௌஷலா அமரசேகர கருத்து தெரிவிக்கையில், 'ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் நாம் ஏற்பாடு செய்யும் மூன்றாவது மோட்டர் கிளினிக் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் நாம் அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த சேவையின் மூலம் எந்த நபரும் பயனடைய முடியும். இதற்காக பயனாளி ஒருவர் ஜனசக்தி நிறுவனத்தின் காப்புறுதியொன்றை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பரிசோதனை நடவடிக்கைகளை பிரத்தியேகமாக மேற்கொள்வதென்றால் சுமார் 10,000 ரூபா வரை செலவாகும். ஆயினும் நாம் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையாக இலவசமாக வழங்குகிறோம். இதற்காக நாம் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளோம்' என்றார்.

யாழ்ப்பாண பகுதி தற்போது அபிவிருத்தியடைந்து வருகிறது. இதன் காரணமாகவே நாம் இந்த பகுதியை மோட்டர் கிளினிக் சேவைகளுக்காக தெரிவு செய்திருந்தோம் என கௌஷலா மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த வாகன பரிசோதனைகளில் எஞ்சின் மற்றும் கியர் கட்டுப்பாட்டு அமைப்பு, எயார் கன்டிஷன் கட்டுப்பாட்டு அமைப்பு, பொடி மற்றும் ச்செசி பரிசோதனை, வாகன பெயின்ட் மற்றும் பொடியின் தரம், டயர் மற்றும் சஸ்பென்சன் அமைப்பு மற்றும் பற்றரி தரப் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஜனசக்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அல்லாத எந்தவொரு வாகன உரிமையாளரும் இந்த வாகன பரிசோதனை முகாம் நிகழ்வில் பங்குபற்றி தமது வாகனங்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

யாழ்ப்பாண பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது மோட்டர் கிளினிக் நிகழ்வாக  இது அமைந்திருந்தது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .