2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

சீனாவின் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு, இந்தியாவிலிருந்து சரிவு

A.P.Mathan   / 2013 மே 28 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 79,829ஆக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 14.7% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 368,627 ஆக பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.7% அதிகரிப்பு எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்திருந்த போதிலும், எதிர்பார்க்கப்பட்டதை விட சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தளவிலேயே அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி காணப்பட்டதை அந்த அறிக்கையிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
 
பிரதானமாக மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .