2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

விற்பனை நிலையங்களில் வாகன தரிப்பிட கட்டணம் அறவிடப்படமாட்டாது

A.P.Mathan   / 2013 ஜூன் 03 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலும், கொழும்பை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுப்பர் மார்க்கட்களில் வாடிக்கையார்கள் தமது வாகனங்களை தரித்து வைப்பதற்காக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும், இது குறித்து உத்தியோகபூர்வ அறிவித்தலை மேல் மாகாணசபை விரைவில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த வர்த்தக நிலையங்களுக்கும் இந்த சட்ட மூலம் பொருத்தமானதாக அமையும் என மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். 
 
குறித்த வர்த்தக கட்டமைப்புகளை பொறுத்தமட்டில் அவற்றை நிர்மாணிக்கும்போதே வாகன தரிப்பிட வசதிகள் வழங்கப்படுவதாகவும், குறித்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு அந்த தரிப்பிட வசதிகளை இலவசமாக ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அந்த நிறுவனங்களின் கட்டாய தேவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .