2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக பந்துல எகோடகே

A.P.Mathan   / 2013 ஜூன் 11 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக பந்துல எகோடகே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
உலகின் மிக பெரிய உணவு மற்றும் குளிர்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஒன்றான நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டுறவு விவகாரங்கள் மற்றும் தொடர்பாடல் பிரிவின் உப தலைவராக கடந்த இருபத்தெட்டு வருடங்களாக பந்துல எகோடகே பணிபுரிந்துள்ளார். 
 
இன்று காலை கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்  வளாகத்தில் வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் இவருக்கு பதவி நியமனம் வழங்கப்பட்டது. 
 
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் சுஜாதா வீரகோன், நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் கணேசன் அம்பலவாணன், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் யூசுப் மரிக்கார் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளார் அனுர சிறிவர்தன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .