2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்களை குறைக்குமாறு மத்திய வங்கி கோரிக்கை

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடன் அட்டைகள் மீது அறவிடப்படும் வட்டி வீதங்களை 4 வீதத்தினால் குறைக்குமாறு இலங்கை மத்திய வங்கி சகல வங்கிகளிடமும் கோரிக்கைவிடுத்துள்ளது. இதர கடன் வழங்கல் வீதங்களை சீராக பேணும் வகையில் இந்த வட்டி வீதத்தை குறைக்குமாறு தாம் கோரியுள்ளதாக மத்திய வங்கியின் பிரத ஆளுநர் நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
 
தற்போது கடன் அட்டைகள் மீதான ஆண்டு வீதம் 28 ஆக அமைந்துள்ளது. இந்த கடன் பெறுமதி 24 வீதத்தை விட அதிகரிக்கக்கூடாது. அதுபோலவே தற்போது வங்கிகள் அறவிடும் கடன் மீதான வட்டி வீதங்களும் மிகவும் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .