2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

உருக்கு இரும்பு, சீமெந்து, சில்லறை வியாபார துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடை

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலம் உருக்கு இரும்பு, சீமெந்து, சில்லறை வியாபாரம், சிறியளவிலான விவசாய மற்றும் அழகியற்கலை பொருட்கள் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகளை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
உள்நாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
உள்நாட்டு முதலீட்டாளர்களின் மூலம் இந்த துறைகளில் குறிப்பிட்ட காலப்பகுதியினுள் முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாவிடின், இந்த தீர்மானம் பின்னர் மாற்றியமைக்கப்படுமெனவும், இது குறித்த மேலதிக முழமையான தரவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் வாகன உதிரிப்பாகங்களை பொருத்துதல், பெற்றோலிய உற்பத்திகளை வடிகட்டல், ஏற்றுமதிக்காக படகுகளை நிர்மாணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .