2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

உயிரிவாயு மூலம் செயற்படும் பாற்பண்ணையை கொண்டுள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட்டவளையில் அமைந்துள்ள தமது பாற்பண்ணைக்கு தேவையான மின்சக்தி தேவையை பெற்றுக்கொள்வதற்கு விசேட நடைமுறையொன்றை சன்ஷைன் குழுமம் முன்னெடுக்கின்றதுடன் பாற்பண்ணையிலுள்ள பசுமாடுகளின் சாணம், சிறுநீர் ஆகியவற்றை பயன்படுத்தி உயிரிவாயு (Biogas) உற்பத்தி செய்கின்றது.
 
வட்டவளை பெருந்தோட்டத்துக்கு சொந்தமான 'லோனாக்' பண்ணை உயிரிவாயுவை பயன்படுத்தி தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அத்துடன் சாதாரண பாற்பண்ணையை போன்றல்லாது 'லோனாக்' பாற்பண்ணையில் பால் சேமிப்பகம், பால் கறக்க பயன்படுத்தப்படும் கருவிகள், புல் வெட்டும் இயந்திரங்கள், பாற்பண்ணைக்கான மின்குமிழ்கள், அலுவலக மின்சாரம் உள்ளிட்ட அனைத்துக்கும்  உயிரிவாயுவை கொண்டு அங்கு நாளாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற 140 அலகு மின்சாரமே பயன்படுத்தப்படுகின்றது.  
 
இந்த உயிரிவாயு கட்டமைப்பு நிறுவனத்துக்கு இரண்டு வழிகளில் உதவுகின்றது. செயற்பாட்டு நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்தும்போது தேசிய மின் கட்டமைப்பின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ளாதபடியால் பாற்பண்ணையின் மின்பட்டியலுக்கு  கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய  தேவை இல்லை. அதுதவிர பசுக்களிமிருந்து பெறும் சாணத்தை கலப்பு உரமாக பயன்படுத்துகின்றமையால் உரத்துக்கான பணத்தை செலவிட வேண்டிய அவசியமும் நிறுவனத்துக்கு இல்லை.  
 
லோனொக் பாற்பண்ணையில் 150 பசுக்கள் இருக்கின்ற நிலையில் டைஜெஸ்டர் மூலம் பசுக்களின் சாணம், சிறுநீர் ஆகியன சேர்க்கப்பட்டு உயிரிவாயு உற்பத்தி முன்னெடுக்கப்படுகின்றது. ஆயினும் டைஜெஸ்டர் ஊடாக 600 பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றை பெற்று உயிரிவாயு உற்பத்திகளை மேற்கொள்ள முடியும் என சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவிக்கின்றதுடன் இலங்கையிலுள்ள நிறுவனமொன்றினால் பயன்படுத்தக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட உயிரிவாயு இயந்திரமாக இது உள்ளதுடன் பாற்பண்ணையில் 40 இற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.  
 
உயிரிவாயு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சன்ஷைன் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ் கோவிந்தசாமி, ' வெறுமையான நிலப்பகுதியாக குறித்த இடம் இருந்தமையே பாற்பண்;ணையை அமைக்க  தேர்ந்தெடுக்க காரணம். அதுதவிர தேவையான அளவு தண்ணீர் அப்பகுதியில் உள்ளது. கடல்மட்டத்திலிருந்து 1,100 மீற்றர் உயரத்தில் குறித்த பகுதி அமைந்துள்ளதும் நன்மையே. சிறந்த காலநிலை நிலவுகின்றது. மேலும் பசுக்களின் கழிவுகளிலிருந்து உயிரிவாயு உற்பத்தி செய்யப்படுகின்றமையானது சுற்றாடலுக்கும் எவ்விதமான தீங்கையும் விளைவிக்காது' என குறிப்பிட்டார்.
 
லோனாக் பாற்பண்ணையின் திட்ட பணிப்பாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், ' 2007 ஆம் ஆண்டு 10 பசுக்களுடன் பாற்பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. ஒரு பசுவிடமிருந்து நாளாந்தம் 35 லீற்றர் பால் கறக்கப்படுகின்றது. தற்போது பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாற்பண்ணையை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் அதேநேரம் பசுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம்' என தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .