2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

விவசாய வள நிலையத்திற்கான பதிவுச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


நிலைபேறான விவசாய வள நிலையத்திற்கான பதிவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈ.யூ.அக்கப் திட்டத்தின் கீழ், இலங்கை வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினால் நிலைபேறான விவசாய வள நிலைய திட்டம் உருவாக்கப்பட்டு நிலைபேறான விவசாய வள நிலையமும் ஏற்படுத்தப்பட்டது.

நெல்லை பிரதான உற்பத்தியாக கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி, அரிசிமா, அரிசி மா சார் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த நிலைபேறான விவசாய வள நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அரிசி, அரிசிமா, அரிசிமா சார் உற்பத்திகளை தமது கிராமங்களிலிருந்து மட்டக்களப்பின் நகரப் பகுதிகளுக்கு  தனித்தனியாக விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி பதிவு செய்யப்பட்ட தரமான உற்பத்திகளை வெளி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

யுத்தத்தினால்; பாதிக்கப்பட்ட கோரளைப்பற்று தெற்கு- கிரான், மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைவாக நேற்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய வங்கியின் சார்பில் ஸ்ரீ பத்மநாதன், இலங்கை வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தேசிய திட்ட முகாமையாளர் எஸ்.கோபாலன் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் மட்டக்களப்பு திட்ட அதிகாரி ரி.சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிலைபேறான விவசாய வள நிலையத்தின் மூலமான உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என இலங்கை வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தேசிய திட்ட முகாமையாளர் எஸ்.கோபாலன் தெரிவித்தார்.

இந்த நடைமுறையின் மூலம் மாவட்டத்தின் கிரான், வவுணதீவு பிரதேசங்களைச் சேர்ந்த 5000க்கும் அதிகமான தொழில் முயற்சியாளர்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .