2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மன்னாரில் புதிய சமுர்த்தி வங்கிக்கிளை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 19 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 
மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பொதுமண்டபம் ஒன்றில் தற்காலிகமாக மன்னார் மத்தி சமுர்த்தி  வங்கிக் கிளை இன்று புதன்கிழமை  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றுவதற்காக 225   சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் அண்மையில் நியமிக்கப்பட்ட நிலையில், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில்  68 சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களில் 7 பேர் மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியிலும்  ஏனையோர் கிராம அலுவலர்களுடனும் மன்னார் பிரதேச செயலகத்திலும் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் எஸ்.தயானந்தா தெரிவித்தார்.

இதன்போது சமுர்த்திக் கொடுப்பனவுகளை பெறுகின்ற மக்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மன்னார் பிரதேச செயலாளர் எஸ்.தயானந்தா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி ஆணையாளர் எஸ்.சசிதரன், மன்னார் நகர பிரதேச செயலக தலைமையக சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.ஏ.அசீஸ், மன்னார் உதவி பிரதேச செயலாளர் எஸ்.பவாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .