2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

வெளிநாட்டு உரிமையாண்மையை கொண்ட காப்புறுதி நிறுவனங்கள் கட்டாயமாக பங்குச்சந்தை பட்டியலிடலில் இருந்து வ

A.P.Mathan   / 2013 ஜூன் 21 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியளவில் இலங்கையில் இயங்கும் அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் எனும் விதிமுறையிலிருந்து வெளிநாட்டு உரிமையாண்மையை கொண்ட நிறுவனங்கள் விலக்கழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்கு முன்னதாக இலங்கையில் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து இலங்கை காப்புறுதி சபையில் பதிவு செய்த காப்புறுதி நிறுவனங்கள் இவ்வாறு குறித்த திகதிக்கு முன்னதாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் எனவும், இந்த திகதிக்கு பின்னர் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து இலங்கை காப்புறுதி சபையில் பதிவு செய்த காப்புறுதி நிறுவனங்கள் குறித்த திகதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் பட்டியலிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முற்று முழுதாக வெளிநாட்டு உரிமையாண்மையை கொண்ட காப்புறுதி நிறுவனங்கள் இந்த விதிமுறையில் இருந்து, குறித்த நிறுவனங்கள் கோரிக்கைவிடுக்கும் பட்சத்தில் விலக்கழிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .