2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவி

A.P.Mathan   / 2013 ஜூன் 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி தனது திருப்தியை வெளியிட்டுள்ளதுடன், வங்கியின் தொடர்ச்சியான நிதியுதவிகளை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் யிவ் குவோன் யூன் அவர்களுக்கும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக யூன் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.
 
வங்கியின் தொடர்ச்சியான பங்களிப்பு மற்றும் நிதியுதவிகள் போன்றன இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களில் அதிகரித்து செல்கின்றமை குறித்து இலங்கை அரசின் சார்பில் நன்றிகளை தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிகளை இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .