2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

றிச்சர்ட் பீரிஸ் டயர் சிறந்த விநியோகத்தர் ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2013 ஜூன் 22 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி நிறுவனத்தின் வருடாந்த விநியோகத்தர் ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் தம்புளை அமாயா லேக் ஹோட்டலில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக குழுமத்தின் பணிப்பாளர் பேராசிரியர் லக்ஷ்மன் ஆர்.வட்டவல கலந்து கொண்டார்.
 
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக நாடு பூராகவும் பரந்து காணப்படும் 1300 விநியோகத்தர்களிலிருந்து, சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்த 60 விநியோகத்தர்கள் தமது குடும்பத்தாருடன் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இந்த விருது வழங்கும் வைபவம் டயர் விநியோகத்தர்களின் குடும்பத்தினர்; வருடாந்தம் ஒன்றுகூடும் நிகழ்வாக அமைந்துள்ளதுடன் பெருமளவு எதிர்பார்க்கும் வைபவமாகவும் அமைந்துள்ளது. நாவின்ன, குருணாகல், கண்டி, வெலிகம மற்றும் கம்பஹ தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆர்பிடெக், ஆர்பிகோ மற்றும் ஆர்பி ரேடியல் டயர்களை விநியோகிக்கும் சிறந்த 50 விநியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இறக்குமதி செய்யப்படும் பிர்லா டயர்கள் மற்றும் ரியுப் வகைகளை (இந்தியா) விநியோகிக்கும் சிறந்த 10 விநியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
 
இந்த விருது வழங்கும் நிகழ்வில், றிச்சர்ட் பீரிஸ் டயர் பல புதிய விருது வழங்கும் பிரிவுகளை அறிமுகம் செய்திருந்தது. இதில், ரிடிரெட்டிங் துறையில் மாகாண மட்ட விருதுகள், ஆர்பிகோ டயர், ஆர்பிடெக், ஆர்பிரேடியல், பிர்லா டயர் மற்றும் ஒடோமடிவ் பற்றரி வர்த்தக நாம சிறப்பு விருதுகள் மற்றும் சிறந்த விற்பனை பிரதிநிதி விருதுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. விற்பனை துறையில் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்த விநியோகத்தர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.
 
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் ரிடிரெடிங் பிரிவில், திக்வெல்ல - சாந்த டயர் மார்ட் நிறுவனத்தின் எம்.எச்.ரி.ஜே.சாந்திரத்ன, நீர்கொழும்பு ஆசிரி டயர் ரேடர்ஸ் உரிமையாளர் எச்.எம்.வசந்த குமார மற்றும் ரம்புக்கன சிசிர டயர் ஹவுஸை சேர்ந்த டபிள்யு.ஏ.டபிள்யு.டபிள்யு. சிசிர குமார ஆகியோர் முறையே வெற்றியாளர், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றிருந்தனர். டிரெடிங் பிரிவில் அநுராதபுரத்தைச் சேர்ந்த ஒடோ டயர்வேய்ஸ் நிறுவனத்தின் பி.ஏ.சுனில் பிரேமரத்ன மற்றும் ஹிருணி டயர் ஹவுஸ் நிறுவனத்தை சேர்ந்த ஐ.ஏ.கருணாதிலக ஆகியோர் இணை வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இரண்டாமிடத்தை ரி.நந்தகுமாரன் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில், 'எமது விநியோகத்தர்கள் எப்போதும், உயர் தரம் வாய்ந்த பொருட்களை உறுதியான விலையில் வழங்குவதை எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் இவர்களுக்கு போட்டிகரமான சந்தையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள உதவுகிறது. எமது விநியோகத்தர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொருட்களை வழங்கும் வகையிலும், நாம் எப்போதும் புதிய மெருகேற்றங்களுக்கு அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம். சந்தை முன்னோடியாக, நாம் எப்போதும் எமது தயாரிப்புகளின் விலைகளை கவர்ச்சிகரமாக பேண நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதுபோன்று பொருட்களின் தரம் குறித்தும் அதிக கவனம் செலுத்துகிறோம். மேலும், எமது விநியோகத்தர்கள் அனைவருக்கும் உரிய காலப்பகுதியில் போதியளவு கையிருப்புகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.
 
றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி, 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1942ஆம் ஆண்டு, இந்நிறுவனத்தின் மூலம் முதல் தடவையாக டயர் ரிடிரெடிங் அறிமுகம் செய்யப்பட்டதுடன், நாட்டின் முதலாவது ரிடிரெடிங் தொழிற்சாலையையும் நிறுவியிருந்தது. பல வெற்றிகரமான வருடங்களை கடந்து, 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பந்தாத் டயர் கம்பனியுடன் பங்குடைமையை ஏற்படுத்தி, ஆர்பிடெக் டயர்களை அறிமுகம் செய்திருந்தது. மாதாந்தம் 50,000க்கும் அதிகமான டயர்களை றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி விற்பனை செய்வதுடன், இலங்கையில் ரிடிரெடட் டயர்கள் விற்பனையில் சந்தை முன்னோடியாகவும் திகழ்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .