2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

தங்க இறக்குமதி வரி விதிப்பு தங்கத்தின் விலையை அதிகரிக்கும்; ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவு

A.P.Mathan   / 2013 ஜூன் 23 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள் 
 
-ச.சேகர்

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் சந்தையில் அதிகளவு காணப்பட்ட போதிலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் வலிந்த விற்பனை நடவடிக்கையின் காரணமாக சந்தை மறைபெறுமதியை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,155.27 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3466.57 ஆகவும் அமைந்திருந்தன. 
 
ஜூன் 17ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,986,529,300 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,148 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,175 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 973 ஆகவும் பதிவாகியிருந்தன. 
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் குட் ஹோப், டீ ஸ்மோல்ஹோல்டர், உடபுசல்லாவ, குருவிட்ட டெக்ஸ்டைல் மற்றும் சிஐரி போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
பீசி ஹவுஸ், சிலோன் பிரின்டர்ஸ், சிலோன் லெதர் (வாக்குரிமை) (2.80), பிம்புத் ஃபினான்ஸ் மற்றும் சிலோன் லெதர் (வாக்குரிமை) (3.10) போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,500 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,000 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலைக்கு 10 வீதம் வரி அறவிடப்படும் எனும் அறிவித்தலை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை 24 கெரட் தங்கத்தின் விலை 48,000 ரூபாவுக்கு விற்பனையானதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். எதிர்வரும் வாரம் இந்த விலை மேலும் அதிகரிக்கக் கூடிய சூழ்நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 130.04 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 202.15 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .