2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

திறைசேரி முறிகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்: மத்திய வங்கி

A.P.Mathan   / 2013 ஜூன் 24 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை இலங்கையின் திறைசேரி முறிகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருவதாகவும், பிணைகளை விற்பனை செய்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்று வார காலப்பகுதியில் மொத்தமாக 6.67 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்துள்ளதாகவும், இதே காலப்பகுதியில் 5.66 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைகளை விற்பனை செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
 
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு குறுகிய கால முதலீடுகளில் ஆர்வம் செலுத்துவதன் காரணமாக இவ்வாறு பிணைகளிலிருந்து வெளியேறி குறுங்கால அரச திறைசேரி முறிகளில் தமது முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் வெளிப்படுத்தி வருவதாக சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்த பிணைகள் விற்பனைக்கும், கடந்த வார இறுதியில் பதிவாகிய இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கும் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .