2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

காணி வரம் வழங்கும் தீவா 'புதையலுடன் காணி'

A.P.Mathan   / 2013 ஜூன் 24 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னணி சலவை தூள் வர்த்தகநாமமான தீவா, தனது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் முகமாக வெகுமதியாக காணி வழங்கும் 'புதையலுடன் காணி' எனும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இத் திட்டத்தின் மூலம் நான்கு அதிர்ஷ்டசாலிகளுக்கு கொழும்புக்கு அருகாமையில் 1 மில்லியன் ரூபா பெறுமதியான காணியினை வெல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ் வருடம் அதிகளவான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் நோக்கில், 90 நாள் ஊக்குவிப்பு காலப்பகுதியில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு நாளாந்தம் ரூ.10,000 பணப்பரிசாக வழங்கப்படுகிறது.
 
இத் திட்டத்தில் பங்கேற்க, 3 தீவா சஷே வெற்று பக்கற் (35, 70, 250 கிராம்) அல்லது தீவா ஒரு பெரிய வெற்று பக்கற் (400 கிராம், 1, 2 கிலோ கிராம்) உடன் தமது முகவரியை குறிப்பிட்டு அனுப்பி வைக்குமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்முறை ஊக்குவிப்பு காலப்பகுதியில் வியாபாரிகளுக்கும் நாளாந்தம் ரூ.2,500 பணப்பரிசினை வெல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந் நாளாந்த வியாபார பரிசிழுப்பில் பங்கேற்பதற்கு வியாபாரியின் விபரம் மற்றும் தயாரிப்பினை கொள்வனவு செய்த இடத்தினை குறிப்பிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் 01ஆம் திகதி முதல் ஜூலை 31 வரை நடைபெறவுள்ள இம் மாபெரும் ஊக்குவிப்பு திட்டத்தில் 4 காணி வெற்றியாளர்கள், 92 நாளாந்த பணப்பரிசு வெற்றியாளர்கள், 92 வியாபாரிகள் ஆகியோர் பயனடையவுள்ளனர். 
 
நான்கு கட்ட பரிசிழுப்பு திட்டத்தின் முதற்கட்ட பரிசிழுப்பில் காணியொன்றை வென்ற அதிர்ஷ்டசாலியாக பிலியன்தல பிரதேசத்தை சேர்ந்த பி.டி.நதிஷா பிரியங்கி தெரிவு செய்யப்பட்டார். தீவா டிடர்ஜன் பவுடரை நீண்ட நாட்களாக பயன்படுத்தும் நதீஷா கருத்து தெரிவிக்கையில், 'இச் செய்தியை அறிந்தவுடன் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். காணி வெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தீவா குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
 
இவ் ஊக்குவிப்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஃபியோனா முனசிங்க, 'எமது மாபெரும் ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 2011ஆம் ஆண்டில் காணி வழங்கும் திட்டத்தை தீவா அறிமுகம் செய்திருந்ததுடன், கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. எமது வாடிக்கையாளர்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை உருவாக்கக் கூடிய தயாரிப்பினை வழங்குவதே எமது குறிக்கோளாகும்' என்றார்.
 
ஹிலால் ஹசீம் (உதவி வர்த்தகநாம முகாமையாளர் - தீவா) கருத்து தெரிவிக்கையில், 'வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அதியுயர் மதிப்பு காரணமாகவே இலங்கையில் தீவாவிற்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. நாம் வெறுமனே எமது நுகர்வோரின் வாழ்க்கையை இலகுவாக்க கூடிய பொருட்களை வழங்குவது மாத்திரமன்றி, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய வகையிலான ஊக்குவிப்பு திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .